• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Chocolate Garland: அழகும் சுவையும் அள்ளும் சாக்லேட் மாலை… பூ கட்டும் தொழிலில் அசத்தும் B.E பட்டதாரி…

GenevaTimes by GenevaTimes
January 27, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Chocolate Garland: அழகும் சுவையும் அள்ளும் சாக்லேட் மாலை… பூ கட்டும் தொழிலில் அசத்தும் B.E பட்டதாரி…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 27, 2025 2:06 PM IST

Chocolate Garland: மலர் மாலைகள் போலக் குழந்தைகள் விரும்பும் சாக்லேட்களைக் கொண்டும் மாலைகள் தயார் செய்து அசத்தி வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த பி.இ. பட்டதாரி இளைஞர்.

X

அழகும்

அழகும் சுவையும் அள்ளும் சாக்லேட் மாலை… பூ கட்டும் தொழிலில் அசத்தும் B.E பட்டதாரி…

திருமணம் தொடங்கி வளைகாப்பு, காதணி விழா என ஒவ்வொரு விழாக்களிலும் மாலைகள் என்பது தவறாமல் இடம்பெறுகின்றது. மாலை என்றவுடன் பலருக்கு பூக்களை தேர்ந்தெடுத்து தொடுத்த மலர் மாலைகள் நினைவுக்கு வந்தாலும், கோவில்களில் மூல விக்கிரகங்களுக்கு வெற்றிலை மாலை, வடை மாலை போன்றவற்றை சாத்தியிருப்பதை பார்த்திருப்பீர்கள்.

இது போல சில இடங்களில் பூக்களுக்கு மாற்றாக வேறு பொருட்களை வைத்து தொடுத்த மாலைகள் அதிக கவனம் பெறுகிறது. உதாரணமாக தலைவர்களுக்கு அணிவிக்கப்படும் பண மாலைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்…

அந்த வகையில் பணத்திற்கு பதிலாக குழந்தைகள் விரும்பும் சாக்லேட் கொண்டு மாலைகள் தயார் செய்து அசத்தி வருகிறார் விருதுநகரை சேர்ந்த பட்டதாரி இளைஞரான குணசேகர பாண்டியன். விருதுநகரில் புகழ்பெற்ற கோவிலான மாரியம்மன் கோவில் எதிர்ப்புறம் பூக்கடை வைத்துள்ள இவர் சாக்லேட்களை மாலையாக தொடுத்து கவனம் ஈர்த்து வருகிறார்.

இதையும் படிங்க: Stone Age People House: குள்ள மனிதர்கள் வாழ்ந்த வீடா… மலைப்பகுதியில் உள்ள கற்கால வீடு பற்றிய மர்மம்..?

பொறியியல் படித்துவிட்டு சவுதியில் பணியாற்றி வரும் குணசேகர பாண்டியன் தான் ஒரு பொறியாளர் என்பதை விட பூக்கடைகாரர் என்பதில் தான் பெருமை என பேச ஆரம்பித்தவர்… படித்து முடித்துவிட்டு முதல் இரண்டு ஆண்டுகள் இந்த தொழிலில் தான் ஈடுபட்டு வந்தேன். தற்போது சவுதியில் வேலை செய்து வருகிறேன். விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம் பூக்கட்டுவது தான் எனக்கு முழுநேர வேலை அது வரை எனது சகோதரி கடையை பார்த்துக்கொள்வார்.

மாலை என்றவுடன் பூமாலைக்கு பதிலாக வேறு சில மாலைகள் செய்யலாம் என இன்ஸ்டாகிராம் பார்த்து சாக்லேட் டில் மாலை செய்ய கற்றுக்கொண்டு செய்ய தொடங்கினேன். இதை பார்த்தவர்கள் ஆர்டர் செய்ய தொடங்கியதால் தொடர்ந்து இது போல செய்து வருகிறேன்.

தற்போது சாக்லேட்டில் பொக்கே, பாதாம் மாலை, உலர் பழங்கள் கொண்ட மாலை, மக்காச்சோள மாலை போன்றவற்றை தயார் செய்து வருகிறேன். இவற்றின் தனித்துவம் காரணமாக பலரும் தற்போது உள்ளூர் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆர்டர் செய்து வருகின்றனர் என்றார்.

இதையும் படிங்க: Vintage Bus: 30 வருஷத்துக்கு முன்ன இருந்த அதே கெத்தோட கம்பேக்… விண்டேஜ் லுக்கில் மாஸா உலா வரும் பஸ்…

மலர் மாலையை மாலை கட்ட தெரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் கட்ட முடியும். ஆனால் சாக்லேட் மாலை போன்றவை மலரை விட அதிக எடை கொண்டவை கட்ட கட்ட அவற்றின் எடையை கையில் தாங்கி கொண்டே கட்ட வேண்டும், இது தான் இதில் இருக்கும் சிரமம். உடல் பலம் இருப்பவர்களாலே இது சாத்தியம் ஆகும் என்று கையில் சாக்லேட்டுகளை அள்ளிக்கொண்டு மாலையை கட்ட தொடங்கினார் குண சேகர பாண்டியன்…

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Virudhunagar,Tamil Nadu

First Published :

January 27, 2025 2:06 PM IST

Read More

Previous Post

34 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட் வென்ற மே.இ.தீவுகள்: தொடரும் ட்ரா! | West Indies win Test in Pakistan after 34 years

Next Post

புத்தகக் கடையைப் பூட்ட கட்ட(ட)ம் கட்டிய வெள்ளை அரசு! – ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை பகுதி -19|oru puthaga kadaikaararin kadhai part 19

Next Post
புத்தகக் கடையைப் பூட்ட கட்ட(ட)ம் கட்டிய வெள்ளை அரசு! – ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை பகுதி -19|oru puthaga kadaikaararin kadhai part 19

புத்தகக் கடையைப் பூட்ட கட்ட(ட)ம் கட்டிய வெள்ளை அரசு! - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை பகுதி -19|oru puthaga kadaikaararin kadhai part 19

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin