Last Updated:
சீனாவில் பாரம்பரிய உடைகளை அணிந்து, ரோபோக்கள் நடனமாடி உள்ளன.
வடகிழக்கு சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹார்பின் பெட்ரோலியம் நிறுவனத்தில் ரோபோக்களுக்கான பிரம்மாண்ட போட்டி நடைபெற்றது.
இதில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ரோபோக்கள், சீனாவின் பாரம்பரிய உடைகளை உடுத்தி, கைகளைக் கூப்பி பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்ததுடன், ‘தைச்சி’ தற்காப்புக் கலை வடிவங்களையும் செய்து காட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.
வியப்பில் ஆழ்த்திய சீன ரோபோக்கள்
இந்த மாநில அளவிலான போட்டியில், 30 பல்கலைக்கழகங்களில் இருந்து 1,700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைக் கொண்ட 448 குழுக்கள் நேரடியாக களம் இறங்கின. செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகள், ரோபோ நடனப் போட்டி மற்றும் அனைத்து நிலப்பரப்புகளிலும் இயங்கும் கூட்டு ரோபோக்கள் என பல பிரிவுகளில் இந்தத் தொழில்நுட்பப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.


