கொழும்பு – புத்தளம் ரயில் பாதையில், சிலாபம் ரயில் நிலையத்திற்கு அருகில் திங்கட்கிழமை (01) ரயில் ஒன்று தடம் புரண்டமையினால், புத்தளம் வழித்தடத்திலான ரயில் பயணங்கள் கொழும்பு கோட்டையிலிருந்து மாதம்பே வரை மட்டுமே இயக்கப்படும் எனப் ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை (01) காலை 9.30 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து சிலாபம் நோக்கிப் புறப்பட்ட ரயில், பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் சிலாபம் ரயில் நிலையத்திற்குள் நுழையும்போது தடம் புரண்டது.
இச்சம்பவத்தின் காரணமாக, கொழும்பு – புத்தளம் ரயில் பாதையில் பயணிக்கும் அனைத்துப் ரயில் சேவைகளும் தற்காலிகமாக மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
எம்.எச்.எம். சியாஜ்


