Last Updated:
நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு தென்னாப்பிரிக்க அணிக்கு அதிகரித்தது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பி பிரிவில் அதிக நெட் ரன் ரேட் பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தலா 4 புள்ளிகள் உடன் அரையிறுதி சுற்றை உறுதி செய்தன.
ஏ பிரிவில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தொடரை விட்டு வெளியேறின. பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில், இரண்டாவதாக செல்லும் அணி என்பதில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி காணப்பட்டது.
நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு தென்னாப்பிரிக்க அணிக்கு அதிகரித்தது. இந்நிலையில் இன்று இங்கிலாந்து அணியுடனான போட்டியின் போது, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையும் படிங்க – கிரிக்கெட் வீரருடனான காதலுக்காக மதம் மாறிய பெண்..! பலரையும் கவர்ந்த காதல் கதை
இதன் மூலம் கூடுதல் நெட் ரன் ரேட் பெற்ற தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்து உடனான போட்டி முடிவதற்கு முன்பாகவே அரை இறுதி சுற்றை உறுதி செய்தது.
இதன்படி குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
March 01, 2025 8:08 PM IST


