• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் காட்டிய அதிரடி; வெளியேற்றப்பட்ட ஜெலன்ஸ்கி! – நடந்தது என்ன? | Trump, Zelenskyy and Vance’s heated argument in the Oval Office

GenevaTimes by GenevaTimes
March 1, 2025
in உலகம்
Reading Time: 11 mins read
0
வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் காட்டிய அதிரடி; வெளியேற்றப்பட்ட ஜெலன்ஸ்கி! – நடந்தது என்ன? | Trump, Zelenskyy and Vance’s heated argument in the Oval Office
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கொண்ட சந்திப்பு காரசார விவாதத்துடன் முடிந்தது, பேச்சுவார்த்தையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக் கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். அந்த சந்திப்பின்போது துணை அதிபர் ஜேடி வேன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பில் ட்ரம்ப் பொறுமையிழந்தவராக காரசார விவாதத்தில் ஈடுபட்டார். ட்ரம்ப் தனது குரலை உயர்த்தி, நீங்கள் மூன்றாம் உலகப் போரை நோக்கி சூதாடுகிறீர்கள். இந்த தேசத்தை நீங்கள் அவமதிக்கிறீர்கள் என்று ஆவேசமாகக் கூறினார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி பல்வேறு விமர்சனங்களை ஈர்த்து வருகிறது.

வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன? கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றார். அதன் பின்னர் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்பை முதன்முறையாக வெள்ளிக்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். வழக்கமான புன்னகைகள், பரஸ்பர கைகுலுக்கள் உடன் தான் பேச்சுவார்த்தை தொடங்கியது.

முதலில் பேசிய துணை அதிபர் வேன்ஸ், “கடந்த 4 ஆண்டுகளாக அமெரிக்கா விளாடிமிர் புதினின் உக்ரைன் படையெடுப்புக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமைதி, வளத்துக்கான பாதை ராஜாங்க ரீதியிலான அணுகுமுறையாக மட்டுமே இருக்க முடியும். அமெரிக்காவை நல்ல தேசமாக அடையாளப்படுத்துவது அது எப்போதும் ராஜாங்க ரீதியிலான அணுகுமுறையை கடைப்பிடிப்பதே. அதிபர் ட்ரம்ப்பும் அதையே செய்கிறார். ஆனால் ஜோ பைடனின் மோதல் போக்கு உக்ரைன் – ரஷ்யப் போரை மேலும் தீவிரமடையவே செய்தது.” என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஜெலன்ஸ்கி, “வேன்ஸ், நீங்கள் என்ன மாதிரியான ராஜதந்திர அணுகுமுறை பற்றி பேசுகிறீர்கள். யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் சொல்வதன் அர்த்தம் என்ன?” என்றார்.

அதற்கு வேன்ஸ், “நான் உங்கள் நாட்டுக்கு அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ராஜதந்திரத்தை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி பேசுகிறேன். நீங்கள் ஓவல் அலுவலகத்துக்கு வந்து அமெரிக்க ஊடகத்தினர் முன்னிலையில் இவ்வாறு பேசுவது அவமரியாதைக்குரிய செயல்.” என்றார்.

ஜெலன்ஸ்கி அப்போது, “போரின்போது எல்லோருக்கும் பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் உங்களுக்கு சாதகமான போக்கு இருப்பதால் நீங்கள் அத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை. எதிர்காலத்தில் நீங்களும் எதிர்கொள்வீர்கள்.” என்றார்.

அப்போது ஆவேசமாகக் குறுக்கிட்ட ட்ரம்ப், “நாங்கள் என்ன மாதிரியாக உணர்வோம் என்றெல்லாம் நீங்கள் எங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. நாங்கள் உங்களின் பிரச்சினைகளை களையவே முயற்சிக்கிறோம்.” என்றார்.

அப்போது ஜெலன்ஸ்கி ஏதோ பேச முயல, மீண்டும் ஆவேசமாக குறுக்கிட்ட ட்ரம்ப், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடும் சூழலில் நீங்கள் இல்லை. நீங்கள் நல்ல நிலையில் இல்லை. நீங்கள் விளையாடும் துருப்புச் சீட்டுகூட உங்களிடம் இல்லை.” என்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெலன்ஸ்கி, “நான் இங்கே விளையாடவில்லை. நான் தீவிரமாகவே சொல்கிறேன்.” என்றார்,

அதற்கு ட்ரம்ப், “நீங்கள் விளையாடுகிறீர்கள். லட்சக் கணக்கான மனித உயிர்களை வைத்து சூதாடுகிறீர்கள். 3-ம் உலகப் போரை நடத்த நீங்கள் சூதாடுகிறீர்கள். நீங்கள் நடந்துகொள்ளும் விதம் தேசத்துக்கு அவமதிப்பு.” என்றார்.

அப்போது குறுக்கிட்ட துணை அதிபர் வேன்ஸ், “நீங்கள் ஒருமுறையாவது நன்றி சொன்னீர்களா?” என்று வினவினார், அதற்கு ஜெலன்ஸ்கி, ”நான் நிறைய முறை எனது நன்றியுணர்வை வெளிப்படுத்தி இருக்கிறேன்.” என்றார். அதற்கும் குறுக்குக் கேள்வியை தொடுத்த வேன்ஸ், “இந்த சந்திப்பில் இதுவரை நீங்கள் நன்றி சொல்லவே இல்லை.” என்றார்.

இதற்கிடையில் ட்ரம்ப் ஜெலன்ஸ்கியுடனான பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டார். இருவரும் கூட்டாக ஊடகங்களை சந்திக்கும் நிகழ்வும் ரத்து செய்யப்பட்டது.

வெளியேற்றப்பட்ட ஜெலன்ஸ்கி: இந்நிலையில் வெள்ளை மாளிகை அறிக்கையில், அதிபர் ட்ரம்ப்புடன் உக்ரைன் அதிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் உக்ரைன் அதிபர், அவருடன் வந்த குழுவினர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறியுள்ளது.

ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததால் டேபிளில் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன என்று தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பு குறித்து ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், “அமெரிக்க தலையீட்டில் அமைதி ஏற்படுவதை ஜெலன்ஸ்கி விரும்பவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.



Read More

Previous Post

Champions Trophy : அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா அணி..

Next Post

ஆசியானில் இணைய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்க சரவாக் இலக்கு – Malaysiakini

Next Post
ஆசியானில் இணைய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்க சரவாக் இலக்கு – Malaysiakini

ஆசியானில் இணைய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்க சரவாக் இலக்கு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin