மின் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மின் இணைப்பை துண்டிக்க சென்ற இலங்கை மின்சார சபை ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சிலாபம் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உறுப்பினர் ஒருவர் புதன்கிழமை (23) நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் காயமடைந்த ஊழியர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

