கேஷ்பேக் கிரெடிட் கார்டு பற்றி முழு விவரத்தை இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.
பொதுவாக கிரெடிட் கார்டுகள் அதன் கஸ்டமர்களுக்கு ஏராளமான ஆஃபர்களை வழங்குவது வழக்கம். அந்த வகையில் கிரெடிட் கார்டுகளை நோக்கி யூசர்களை ஈர்க்கக்கூடிய முக்கியமான ஒன்று கேஷ்பேக் ரிவார்டுகள் தான். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் மேற்கொண்ட ஒரு பர்ச்சேஸுக்காக அவர் செலவு செய்த தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மீண்டும் கஸ்டமர் கிரெடிட் கார்டு அக்கவுண்டுக்கு கிரெடிட் செய்யப்படுவதே கேஷ்பேக். சில ஆஃபர்கள் 5% வரையிலான கேஷ்பேக்குகளை கூட வழங்குகின்றன.
ஆனால் அனைத்து வகையான பிரிவுகளுக்கும் உங்களால் கேஷ்பேக்கை பெற முடியாது. மூவி டிக்கெட்டுகள், டைனிங், இ-காமர்ஸ், ஃபுட் டெலிவரி அப்ளிகேஷன்கள் மற்றும் க்ரோசரி போன்ற குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு வங்கிகள் வழக்கமாக அதிக கேஷ்பேக்குகளை வழங்குகின்றன. இப்போது கிரெடிட் கார்டு மூலமாக வழங்கப்படும் கேஷ்பேக்குகளின் பலன்களை அதிகரிக்க இதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.
Also Read:
FD-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் வட்டி எவ்வளவு கிடைக்கும்? பிரபல வங்கிகளின் லிஸ்ட்
கேஷ்பேக் எப்படி வேலை செய்கிறது?: கேஷ்பேக் என்பது கிரெடிட் கார்டு மூலம் ரிவார்ட் பெறப்படும் மூன்று முக்கியமான பிரிவுகளில் ஒன்றாகும். கேஷ்பேக்குகள் பெறுவதில் உங்களுக்கு அதிக ஆர்வம் இருந்தால் நீங்கள் இதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம். ரிவார்டு பாயிண்டுகளைப் போல அல்லாமல், கேஷ்பேக்குகளை வைத்து நீங்கள் உடனடியாக பொருட்கள் அல்லது சேவைகளை வாங்கலாம்.
கேஷ் பேக்குகள் வழக்கமாக கார்டு ஹோல்டரின் அக்கவுண்டில் நேரடியாக கிரெடிட் செய்யப்படும். அதனை பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய மாத பில்லை கூட செலுத்தலாம். ஒரு சில கார்டு வழங்குனர்கள் கேஷ்பேக்குகளை கொண்டு ஃபிளைட் டிக்கெட் மற்றும் ஹோட்டல் போன்றவற்றை புக் செய்வதற்கு அனுமதிக்கின்றன. ஆனால் பயணம் அல்லது ஃபிளைட் புக்கிங் செய்வதற்கு கேஷ்பேக் கார்டை பயன்படுத்துவது புத்திசாலித்தனமான யோசனையாக இருக்காது.
ஏனெனில் இதற்கு நீங்கள் அதிக கேஷ் பாயிண்டுகளை செலவு செய்ய வேண்டும். கேஷ் பேக்குகளை பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட தேதி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்காது. எனினும் சில வங்கிகள் கேஷ்பேக்குகள் மூலமாக பெறப்பட்ட கேஷ் பாயிண்ட்களை குறிப்பிட்ட காலத்திற்குள் ரெடீம் செய்ய வேண்டும் என்று நிபந்தனைகளை விடுத்திருக்கும். கேஷ்பேக் மூலம் ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கலாம்?: கேஷ்பேக்குகள் பொதுவாக வங்கிகளை பொறுத்து மாறுபடும். உதாரணமாக, ஆன்லைனில் நீங்கள் செலவு செய்யும் அனைத்து பணத்திற்கும் 5% கேஷ்பேக்கை சில கார்டுகள் வழங்கும். அதே நேரத்தில் ஆஃப்லைனில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு 1% கேஷ்பேக் கிடைக்கும்.
கேஷ்பேக்கில் சேர்க்கப்படாத பிரிவுகள் எவை?: நீங்கள் செலுத்தும் EMI சம்பந்தப்பட்ட பேமெண்ட்களுக்கு கேஷ்பேக் பொருந்தாது. மேலும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களுக்கான செலவுகளுக்கும் கேஷ்பேக் கிடைக்காது. ஒரு சில கிரெடிட் கார்டுகள் யூட்டிலிட்டி டிரான்ஸாக்ஷன்களுக்கும் கேஷ் பேக்குகளை அனுமதிக்காது. அதுமட்டுமல்லாமல் சொத்து சம்பந்தப்பட்ட கட்டணங்கள், வாடகை கமிஷன்கள் அல்லது இதுபோன்ற பேமெண்ட், இ-வாலட்டுகள், இன்சூரன்ஸ் பேமெண்ட்கள், கல்வி சார்ந்த செலவுகள், ரயில் டிக்கெட் புக்கிங், நகை வாங்குவது, கிரெடிட் கார்டு பேமெண்ட் மற்றும் சுங்கச்சாவடியில் செலுத்தும் பேமெண்ட்களுக்கு கேஷ்பேக் பெனிஃபிட் கிடையாது. இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய அந்தந்த வங்கியின் இணையதளத்தை பார்க்கலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
