தேசியக் கொடியுடன் தர்ணா
“சட்டசபைக்குள் தேசியக் கொடியை கொண்டு வரக்கூடாது. தேசியக் கொடிக்கு அவமானம் செய்ய கூடாது,” என, சபாநாயகர் காதர் அறிவுறுத்தினார். ஆனால், சட்ட மேலவையில் பா.ஜ., உறுப்பினர்கள் தேசியக் கொடியுடன் வந்தனர்.
துணை சபாநாயகர் பாராட்டு
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கண்டித்து, சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் அசோக் நேற்று ஆக்ரோஷத்துடன் பேசினார். சபையை ஒத்திவைத்த பின், துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி, எதிர்க்கட்சித் தலைவருக்கு கைகொடுத்து, “மிகவும் ஆவேசத்துடன், இரு கைகளை உயர்த்திப் பேசி அசத்தி விட்டீர்,” என பாராட்டுத் தெரிவித்தார். “தேச பக்தி விஷயம் என்பதால், தானாக வந்துவிட்டது,” என, அசோக் பதில் கூறினார்.
எத்னாலுக்கு ஆதரவு
பா.ஜ., – எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு தவறான வார்த்தையை கூறினார். இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், “பாகிஸ்தான் ஆதரவாளர்களை, எந்த வார்த்தை பயன்படுத்தியும் விமர்சனம் செய்யலாம்,” என, சபாநாயகர் காதர் தெரிவித்தார்.
ஊருக்கு அனுப்பி வையுங்கள்!
சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட பின், ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்பது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வராண்டாவில் பேசிக் கொண்டிருந்தனர். சிலர், ‘இரவு முழுதும் போராட்டம் நடத்தலாம்’ என்றும்; சிலர், ‘போராட்டத்தை முடித்துவிட்டு ஊருக்கு அனுப்பி வையுங்கள்’ என்றனர். அங்கு ஊடகத்தினர் இருப்பதை கவனித்த பசனகவுடா பாட்டீல் எத்னால், “எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கு செல்லலாம் வாருங்கள்,” என்று நைசாக அழைத்துச் சென்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement