Last Updated:
ஆசிய விளையாட்டில் ஒரு போட்டியில் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளாமல் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது எப்படி?.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய டி20 கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியும் இடம்பெற்றுள்ளது.
இதில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச தரவரிசை அடிப்படையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்டவை நேரடியாக காலிறுதியை எட்டின. இந்நிலையில் தகுதிப் போட்டியில் விளையாடி காலிறுதிக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தானுடன் இந்தியா மோதுவதாக இருந்தது. ஆனால் கனமழை காரணமாக காலிறுதிப் போட்டி கைவிடப்பட்டது. டாஸ் கூட போடப்படாத அளவுக்கு மழை பெய்ய ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மாற்று ஆட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படாத நிலையில், சர்வதேசத் தரவரிசைப் பட்டியலில் ஆப்கானிஸ்தானை விட மேலே இருப்பதால், இந்திய அணி அரையிறுதியை எட்டியது. இந்திய அணி ஒரு போட்டியில் கூட இன்னும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளம் மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான மற்றொரு காலிறுதிப் போட்டியில் வெல்லும் அணியை இந்தியா அரையிறுதியில் எதிர்கொள்ளும்.


