• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘Arnab’ அதிதீவிர சூறாவளியாக வலுப்பெற்றது – கடலில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
‘Arnab’ அதிதீவிர சூறாவளியாக வலுப்பெற்றது – கடலில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
வானிலை & சூழல்
/
‘Arnab’ அதிதீவிர சூறாவளியாக வலுப்பெற்றது – கடலில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் Arnab அதிதீவிர சூறாவளியாக வலுப்பெற்றது. கடலில் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை.


வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள ‘Arnab’ சூறாவளி, அதிதீவிர சூறாவளியாக வலுவடைந்துள்ள நிலையில், குறிப்பிட்ட கடற்பிரதேசங்களுக்கு மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளுக்காகச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (27) அதிகாலை 2.30 மணியளவில் இந்தச் சூறாவளி வட அகலாங்கு 15.9 பாகை மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4 பாகைக்கு அருகில் மையம் கொண்டிருந்ததாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சூறாவளியானது காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கே சுமார் 890 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சூறாவளி இன்று மாலை 5.30 மணி வரை மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அதன் பின்னர் வடமேற்கு திசையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து நாளை (28) முற்பகல் 11.30 மணியளவில் அதிதீவிர சூறாவளியாக இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ளது.

இந்தச் சூறாவளியினால் இலங்கைக்கு நேரடியான தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படவில்லை.

எனினும், சூறாவளியுடன் தொடர்புடைய காற்றோட்டம் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை தொடரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சூறாவளியின் தாக்கத்திற்குட்பட்ட கடற்பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 80 முதல் 140 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், கடல் அலைகள் சுமார் 3 முதல் 4 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் குறித்த கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வட அகலாங்கு 10 பாகை முதல் 20 பாகை வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80 பாகை முதல் 95 பாகை வரையிலும் அமைந்துள்ள கடற்பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

ஏற்கனவே இந்தக் கடற்பிரதேசங்களில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், அபாயகரமான பகுதிகளிலிருந்து விலகிச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பிலிருந்து காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு ஊடாக முல்லைத்தீவு வரையான ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்கள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலைகளின் உயரம் 2 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படக்கூடும்.

இதனால் நாட்டைச் சூழவுள்ள கடற்பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர், வளிமண்டலவியல் திணைக்களத்தின் அடுத்தடுத்த வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

‘Arnab’ சூறாவளி இலங்கையை நேரடியாகத் தாக்கும் என எதிர்பார்க்கப்படாத போதிலும், கடற்பிரதேசங்களில் பலத்த காற்று மற்றும் உயரமான அலைகள் ஏற்படக்கூடும் என்பதால், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடற்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

Read More

Previous Post

காய்கறி மார்க்கெட்டையே மிஞ்சிய தங்கக் கடைகள்.. சீனாவில் நகை வாங்க குவிந்த மக்கள்.. ஏன் தெரியுமா? | Why Are Record Crowds Rushing to Buy Jewelry in China? Gold Shops Busier Than Vegetable Markets

Next Post

TuJu செயலிக்கான புரோசிக்னல் கூட்டாண்மையை நியாயப்படுத்திய LLM | Makkal Osai

Next Post
TuJu செயலிக்கான புரோசிக்னல் கூட்டாண்மையை நியாயப்படுத்திய LLM | Makkal Osai

TuJu செயலிக்கான புரோசிக்னல் கூட்டாண்மையை நியாயப்படுத்திய LLM | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin