Last Updated:
விமானி அவசர அவசரமாக சாலையில் விமானத்தை தரையிறக்கியதால் அதிர்ச்சி.
அமெரிக்காவில் வானத்தில் பறந்து கொண்டிருந்த நீர் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அரிசோனா மாகாணத்தில் ஆகாயத்திலும், நீரிலும் செல்லக்கூடிய விமானத்தில் சுற்றுலாப் பயணிகள் மூன்று பேர் பயணம் மேற்கொண்டிருந்தனர். பீனிக்ஸ் நகரில் வானத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த விமானி அவசர அவசரமாக சாலையில் விமானத்தை தரையிறக்கினார்.
#WATCH | அமெரிக்காவில் வானில் பறந்தபோது நீர் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட காட்சி#america #seaplane #emergencylanding #News18TamilNadu pic.twitter.com/3R1XfDMwuy
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 18, 2026
சாலையில் வாகன போக்குவரத்து அதிகளவில் இருந்த போதும் விமானி மேக் ட்ராகர்ஸ் தரையிறங்குவதற்கான இடத்தைத் தேடி, ஒரு வெறிச்சோடிய சாலையில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார். இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் மூன்று பேரும் காயமின்றி வெளியே வந்தனர். கடல் விமானத்தில் இயந்திரக் கோளாறுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

