• Login
Tuesday, June 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

AI Bubble-ஐ உடைக்கும் சீனா.. அஞ்சி நடுக்கும் அமெரிக்க பங்குச்சந்தை.. இனி மொத்தமும் சரிவு தான்! | China’s Free Open-Source AI Models Threaten to Burst US AI Bubble – China will crash the US stock market in 2026

GenevaTimes by GenevaTimes
June 30, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
AI Bubble-ஐ உடைக்கும் சீனா.. அஞ்சி நடுக்கும் அமெரிக்க பங்குச்சந்தை.. இனி மொத்தமும் சரிவு தான்! | China’s Free Open-Source AI Models Threaten to Burst US AI Bubble – China will crash the US stock market in 2026
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


AI Bubble-ஐ உடைக்கும் சீனா.. அஞ்சி நடுக்கும் அமெரிக்க பங்குச்சந்தை.. இனி மொத்தமும் சரிவு தான்!

செயற்கை நுண்ணறிவு துறை தற்போது தலைகீழாக மாறி வருகிறது, ஏற்கனவே இதற்கான சிக்னல் ஏஐ சார்ந்த நிறுவன பங்குகள் குறைய துவங்கியுள்ளது மூலம் பல முதலீட்டாளர்கள் ஏஐ நிறுவனங்கள் விரைவாக லாபத்தை அடைய வேண்டும் என மிரட்டி வருகின்றனர்.

ஆனால் சந்தையில் ஏஐ சேவைக்கான டிமாண்ட் தொடர்ந்து குறைந்து வருகிறது, காரணம் உலகில் பல நிறுவனங்கள் அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக ஏஐ நம்பி ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர். ஆனால் தற்போது ஏஐ சேவைக்காக செலவிடும் தொகை பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும், அதன் வாயிலாக இலக்குகளையும் முழுமையாக எட்ட முடியாத காரணத்தால் மீண்டும் மனித ஊழியர்களை அதிகளவில் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது.

AI Bubble-ஐ உடைக்கும் சீனா.. அஞ்சி நடுக்கும் அமெரிக்க பங்குச்சந்தை.. இனி மொத்தமும் சரிவு தான்!

இத்தகைய சூழ்நிலையில் ஏஐ சேவைக்கான டிமாண்ட் குறையும், இதேபோல் லாபம் பெறுவதற்காக ஏஐ மாடல்கள் தங்களுடைய கட்டணத்தையும் குறைக்க முடியாத நிலையில் மாட்டிக்கொண்டு உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் சீனாவின் ஓப்பன் சோர்ஸ் பூதம் வந்துள்ளது, இந்த பூதம் அமெரிக்க ஏஐ நிறுவனங்களை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த அமெரிக்க பங்குச்சந்தையையும் தரைமட்டத்திற்கு தள்ள உள்ளது.

அமெரிக்க ஏஐ நிறுவனங்கள் பெரும் கட்டணத்துடன் மக்களுக்கு அளித்து வரும் LLM மாடல்களை சீனா நிறுவனங்கள் அதே திறனுடன், சில இடத்தில் அதீத திறனுடன் கொண்ட ஏஐ மாடல்களை இலவசமாக ஓப்பன் சோர்ஸ் முறையில் வெளியிட்டு அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது.

இதில் முக்கியமாக Z.ai நிறுவனத்தின் GLM-5.2 தற்போது ஏஜென்டிங் திறன்களை கொண்டுள்ளது, மூன்ஷாட் ஏஐ நிறுவனத்தின் KIMI மாடல், இதை தாண்டி டீப்சீக், குவென் ஆகிய மாடல்கள் ஓப்பன் சோர்ஸ் மாடலில் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் தற்போது அமெரிக்காவிலும், உலக நாடுகளிலும் கிடைக்கிறது.

சீனா எப்படி சீப்பான முறையில் தரமாான பொருட்களை உற்பத்தி செய்து உலகளாவிய சந்தையை பிடிக்கிறதோ, அதேபோல் தற்போது ஏஐ துறையிலும் கடைப்பிடிக்கிறது. இதேபோல் தொடர்ந்து இந்த சீன ஏஐ மாடல்கள் மேம்படுத்தப்பட்டு வருவது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இது கிளாட், ஓப்பன் ஏஐ, கூகுள் ஏஐ மாடல்களுக்கு இணையாக உள்ளது.

இந்த மாடல்கள் இலவசமாக கிடைக்கும் காரணத்தால் ஏஐ மாடல்களுக்கான செலவுகளை குறைக்க திட்டமிட்டும் அனைத்து நிறுவனங்களுக்கும் சீனாவின் ஓப்பன் சோர்ஸ் மாடல் தான் விதிவிளக்காக இருக்கும்.

AI Bubble-ஐ உடைக்கும் சீனா.. அஞ்சி நடுக்கும் அமெரிக்க பங்குச்சந்தை.. இனி மொத்தமும் சரிவு தான்!

இதை பயன்படுத்துவதன் மூலம் 100 மில்லியன் டாலர் செலவாகும் இடத்தில் 5 மில்லியன் டாலர் மட்டுமே செலவாகு என்றால் யார் மறுப்பார்கள். இதை எந்தொரு நிறுவனமும் மறுக்க முடியாத ஓன்றாக இருப்பதால் சீனாவின் கை ஏஐ துறையில் ஓங்கும் நாள் தொலைவில் இல்லை என்பது தான் உண்மை.

இதன் அடுத்தக்கட்ட ரியாக்ஷன் பங்குச்சந்தை, சீனாவின் ஏஐ மாடல்கள் அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஆந்திரோபிக், ஓப்பன் ஏஐ போன்ற நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் உருவாகும், அதேபோல் தற்போது நிர்ணயம் செய்துள்ள நிறுவனத்திற்கான அதிகப்படியான மதிப்பு தொடர்ந்து பெற முடியாது.

அமெரிக்க ஏஐ நிறுவனங்களின் மதிப்பீடு குறைந்தால், பங்கு விலையும் குறையும், இதேபோல் ஏஐ சார்ந்த முதலீடுகள் குறைந்து ஒட்டுமொத்த ஏஐ எகோசிஸ்டத்தின் மதிப்பீடும் குறையும். ஆனால் ஏஐ டிமாண்ட் மற்றும் அதன் பயன்பாடு குறையாது.

இத்தகைய சூழ்நிலையில் தான் ஏஐ நம்பி உயர்ந்துக்கொண்டு இருக்கும் அமெரிக்க பங்குச்சந்தை டமாள் என விழுவது நிச்சயம் என கூறுகிறார் POLSIA.AI நிறுவனத்தின் நிறுவனர் பென் செரா. இப்படி தான் அமெரிக்காவில் உருவாகியுள்ள AI Bubble-ஐ சீனா உடைக்கும் என கூறப்படுகிறது.

Share This Article

English summary

China’s Free Open-Source AI Models Threaten to Burst US AI Bubble – China will crash the US stock market in 2026

China is releasing powerful open-source AI models like DeepSeek, Qwen, Moonshot AI’s KIMI, and Z.ai’s GLM-5.2 that match or exceed the performance of US models such as those from OpenAI, Anthropic, and Google, but at a fraction of the cost. This development is expected to reduce demand for expensive proprietary AI services, force US companies to cut prices, and trigger a sharp correction in the high valuations of American AI stocks, potentially bursting the AI bubble in the US stock market.

Story first published: Tuesday, June 30, 2026, 16:16 [IST]

Other articles published on Jun 30, 2026

Read More

Previous Post

தூங்கி எழுந்து பார்த்தா ஷாக்.. ஜெர்மனிக்கு நேர்ந்த சோகம்! நாக்அவுட் சுற்றில் மரண அடி கொடுத்த பராகுவே | FIFA World Cup 2026: Paraguay Eliminate Four-Time Champions Germany in Dramatic World Cup Shootout by 4-3

Next Post

மேற்கு மலேசியாவில் RON97, மானியமில்லாத RON95 மற்றும் டீசல் விலை 10 சென் குறைந்தது. – Malaysiakini

Next Post

மேற்கு மலேசியாவில் RON97, மானியமில்லாத RON95 மற்றும் டீசல் விலை 10 சென் குறைந்தது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin