• Login
Thursday, July 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

AI பயன்படுத்தி நீங்களே ஒரு செயலி உருவாக்கனுமா? இந்த இடத்துக்கு போனா 3 நாள் போதும் ஈஸியா கத்துக்கலாம்!! | 3-Day AI App-Building Bootcamp in Chennai — Govt. of Tamil Nadu Offers No-Code & Low-Code Training with Certificate

GenevaTimes by GenevaTimes
July 2, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
AI பயன்படுத்தி நீங்களே ஒரு செயலி உருவாக்கனுமா? இந்த இடத்துக்கு போனா 3 நாள் போதும் ஈஸியா கத்துக்கலாம்!! | 3-Day AI App-Building Bootcamp in Chennai — Govt. of Tamil Nadu Offers No-Code & Low-Code Training with Certificate
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


AI பயன்படுத்தி நீங்களே ஒரு செயலி உருவாக்கனுமா? இந்த இடத்துக்கு போனா 3 நாள் போதும் ஈஸியா கத்துக்கலாம்!!

தற்போது ஏஐ தொழில்நுட்பம் தான் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பமாக இருக்கிறது. இந்த ஏஐ பயன்படுத்தி தொழிலில் சாதித்தவர்கள், ஸ்டார்ட் அப் தொடங்கி வெற்றி பெற்றவர்கள் என ஏராளமானவர்களை காண முடிகிறது. அப்படி ஏஐ கொண்டு சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்காகவே முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு டக்கரான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி செயலி உருவாக்கம் என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி சென்னையில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வரும் 15ஆம் தேதி 17ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

AI பயன்படுத்தி நீங்களே ஒரு செயலி உருவாக்கனுமா? இந்த இடத்துக்கு போனா 3 நாள் போதும் ஈஸியா கத்துக்கலாம்

சென்னை ஈக்காட்டு தாங்கலில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் வகுப்புகள் நடக்கின்றன. இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள்/ திருநம்பிகள் 18 வயதிற்கு மேல் மற்றும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரளவு கணினி அனுபவம் இருந்தால் போதும். இதற்கு கட்டணம் 6000 ரூபாய் ஆகும்.

இதற்கு முன்பதிவு அவசியம் என்பதால் www.editn.in என்ற இணையதளம் அல்லது 8668100181 / 9360221280 என்ற எண்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் –தமிழ்நாடு
மூன்று நாள் “செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்“ பயிற்சி

Entrepreneurship Development and Innovation Institute-TN
Three days “App Development Using AI” Training Programme#CMJosephVijay | #TNDIPR |… pic.twitter.com/MkGRqOmv5j

— TN DIPR (@TNDIPRNEWS) July 2, 2026 “>

இதில் பங்கேற்பவர்கள் தங்கள் யோசனைகளை செயலில் பயனடையும் வகையில் AI prototype-களாக (செயலியாக) மாற்றக் கற்றுக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி ஸ்டார்ட் அப்கள் பயன்படுத்தும் No-Code / Low-Code AI கருவிகள் பற்றிய பயிற்சி, ChatGPT / Gemini Pro / NotebookLM கொண்டு செயலி உருவாக்க பயிற்சி, Firebase / Glide / Zapier / Lovable / Replit / Bolt, Prompt Engineering முறைகள் குறித்து விளக்கப்படுமாம்.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் உருவாக்கம், கல்வி, சுகாதாரம், நிதி, சில்லறை வணிகம் போன்ற துறைகளில் பயன்பாட்டு மாதிரிகள் உருவாக்கம் கற்றுதரப்பட உள்ளன. மாணவர்கள், நிறுவனர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கு இது பொருத்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுவதால் வேலைவாய்ப்புகளுக்கு உதவும்.

Share This Article

English summary

3-Day AI App-Building Bootcamp in Chennai — Govt. of Tamil Nadu Offers No-Code & Low-Code Training with Certificate

AI பயன்படுத்தி நீங்களே ஒரு செயலி உருவாக்கனுமா? இந்த இடத்துக்கு போனா 3 நாள் போதும் கத்துக்கலாம்!!- The Government of Tamil Nadu’s Entrepreneurship Development & Innovation Agency, under Chief Minister Vijay, is offering a three-day AI app-building training in Chennai from July 15–17 (10:00 AM–5:00 PM) at the EDIN campus in Ekkattuthangal.

Story first published: Thursday, July 2, 2026, 17:30 [IST]

Other articles published on Jul 2, 2026



Read More

Previous Post

உங்கள் மொத்த பணம் அம்போ? அரண்டு போன இந்திய இளைஞர்கள்.. ஒரு மெயிலால் வந்த குழப்பம்.. என்ன நடந்தது | Upstox Accidental Account Freeze Email Sparks Panic Among many Investors, What really happened

Next Post

தவெகவில் இணைந்தவர்களை விஜய் விரைவில் நடுத்தெருவில் நிறுத்துவார்: டிடிவி தினகரன் … | Makkal Osai

Next Post
தவெகவில் இணைந்தவர்களை விஜய் விரைவில் நடுத்தெருவில் நிறுத்துவார்: டிடிவி தினகரன் … | Makkal Osai

தவெகவில் இணைந்தவர்களை விஜய் விரைவில் நடுத்தெருவில் நிறுத்துவார்: டிடிவி தினகரன் ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin