Last Updated:
500 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு புரட்சிகரமான AI தளத்தை இந்தியா விரைவில் தொடங்கப் போகிறது என ஆகாஷ் அம்பானி கருத்து.
“நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 10 சதவீதம் அல்லது இரட்டை இலக்கத்திற்கு இயக்கும் சக்தி கொண்ட ஒரு இயந்திரம் AI” என்று ஜியோ உலக வர்த்தக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மும்பை தொழில்நுட்ப வாரத்தில் ஆகாஷ் அம்பானி கூறினார்.
மும்பை டெக் வீக் 2025-இல் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் (RJIL) தலைவர் ஆகாஷ் அம்பானி தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றல் AI-க்கு உண்டு. இருப்பினும், சர்வதேச உலகில் இந்தியாவை ‘AI குருவாக’ நிலைநிறுத்த, மூன்று பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அவை உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி – மேம்பாடு மற்றும் திறமை ஆகியவற்றில் முதலீடு செய்வது. கோடிக்கணக்கான பயனர்களுக்கு சேவை செய்யக்கூடிய AI உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்களில் நாம் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். ஜியோ ஏற்கனவே அதைச் செய்து கொண்டிருக்கிறது” என ஜாம்நகரில் ஜியோ சமீபத்தில் அறிவித்த ஜிகாவாட் திறன் கொண்ட AI தரவு மையத்தைப் பற்றி ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.
தொடர்ந்து AI குறித்து பேசிய ஆகாஷ் அம்பானி, “நாங்கள் தொடர்ந்து AI அடிப்படையிலான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்து வருகிறோம். ஜியோ ஏற்கனவே 1,000 க்கும் மேற்பட்ட தரவு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்களைக் கொண்ட ஒரு வலுவான AI குழுவை உருவாக்கியுள்ளது. புதிய யோசனைகள் மற்றும் புதுமையான திறன்களை விரிவுபடுத்துவதே எங்களின் முக்கிய குறிக்கோள்.
இதையும் படிக்க: “வேலை – வாழ்க்கை சமநிலை இப்படி தான் இருக்க வேண்டும்” – ஆகாஷ் அம்பானி கருத்து
ஏஐ-யால் பலருக்கும் பணி போகும் என கணிக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் வளர்ச்சிக்கான இன்ஜினாக ஏஐ இருக்கும். 500 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு புரட்சிகரமான AI தளத்தை இந்தியா விரைவில் தொடங்கப் போகிறது. இந்தியா இனி பின்தங்கியிருக்காது. உண்மையில், உலகின் அதிக தரவு பயனரான சீனாவை கூட நாம் இப்போது விஞ்சிவிட்டோம். 2015-க்கு முன்பு நாட்டில் இணைய வேகம் எவ்வளவு மெதுவாக இருந்தது. இப்போது அது எங்கு சென்றுவிட்டது. AI-யிலும் இதேபோன்ற வெற்றியை அடைய முடியும்” என்று அவர் கூறினார்.
March 01, 2025 3:06 PM IST


