• Login
Friday, August 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

AI ஆபாச வீடியோக்கள் முதல் Facebook குழுக்கள் வரை – பொலிஸார் விடுத்த கடும் எச்சரிக்கை! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
AI ஆபாச வீடியோக்கள் முதல் Facebook குழுக்கள் வரை – பொலிஸார் விடுத்த கடும் எச்சரிக்கை! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
AI ஆபாச வீடியோக்கள் முதல் Facebook குழுக்கள் வரை – பொலிஸார் விடுத்த கடும் எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில், குறிப்பாக பேஸ்புக் குழுக்களில், குழந்தைகள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய ஆபாச புகைப்படங்கள் மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகள் அதிகளவில் பரவி வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச காணொளிகளை பகிரும் சமூக ஊடக தளங்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய இலங்கை பொலிஸார் விசேட மின்னஞ்சல் முகவரியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சமூக ஊடகங்களில், குறிப்பாக பேஸ்புக் குழுக்களில், குழந்தைகள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய ஆபாச புகைப்படங்கள் மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகள் அதிகளவில் பரவி வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இவ்வாறான ஆபாச உள்ளடக்கங்களை பகிரும் சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் தளங்கள் தொடர்பான முறைப்பாடுகளை dir.cid@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறான உள்ளடக்கங்களை பரப்பும் பேஸ்புக் குழுக்களை அடையாளம் கண்டு, அவற்றை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை கணினி குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவையான சந்தர்ப்பங்களில் சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

21 வயது இளைஞர் கைது

இதற்கிடையில், குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆபாச புகைப்படங்களை பகிர்ந்த பேஸ்புக் குழுவொன்றை நடத்தி வந்ததாகக் கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பெலியத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களை விசாரணை செய்யும் பணியகத்தின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால், இலங்கை பொலிஸாரின் கணினி குற்ற விசாரணைப் பிரிவுக்கு 011 2381058 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்களை இலக்காகக் கொண்டு ஆபாச உள்ளடக்கங்களை உருவாக்குதல், பகிர்தல் அல்லது பரப்புதல் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் .. வரலாறு படைத்த பிரக்ஞானந்தா | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

ரெட்டா உடல் எடைக் குறைப்பு தயாரிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க​ வேண்டும் என சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை – Malaysiakini

Next Post

ரெட்டா உடல் எடைக் குறைப்பு தயாரிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க​ வேண்டும் என சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin