சாம்ராஜ் நகர், : ஒரு மாதமாக சந்தானபாளையா கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, வனத்துறையினர் அமைத்திருந்த கூண்டில் சிக்கியது. ‘வேறு வனப்பகுதியில் விட வேண்டாம்’ என கிராமத்தினர் கேட்டுக் கொண்டனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுாரின் சந்தானபாளையா கிராமத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக கால்நடைகளை, சிறுத்தை ஒன்று தாக்கி வந்தது. இதனால் மார்தள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.
இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும், சிறுத்தை தென்பட்ட இடங்களில் கூண்டுகள் அமைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் நஞ்சன்கூடின் கோனனுார் கிராமம் – ஹனுமன்பூர் சாலையில், சிறுத்தை ஒன்று சாலையை கடப்பதை, கார் ஓட்டுனர் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில், நேற்று காலையில் வனத்துறையினர் அமைத்திருந்த கூண்டில், சிறுத்தை சிக்கியது. தகவல் அறிந்து வனத்துறையினர் அங்கு வந்தனர்.
அப்போது கிராமத்தினர், ‘சிறுத்தையை வேறு வனப்பகுதியில் விட வேண்டாம். அது மீண்டும் கால்நடைகளை தாக்கும்.
இதை பன்னரகட்டா உயிரியல் பூங்காவிலோ அல்லது மைசூரு உயிரியல் பூங்காவிலோ விட்டுவிடுங்கள்’ என கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகளும், உயர் அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement