Last Updated:
ஜூலை 1ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் உணவு விற்பனை செய்யப்படாது என ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 1ஆம் தேதி முதல் ஸ்விகி, சொமோட்டோ போன்ற ஆன்லைன் நிறுவனங்களுக்கு உணவு விற்பனை செய்வது நிறுத்தப்படும் என்று நாமக்கல் நகர மற்றும் தாலுகா ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்லில் நகர மற்றும் தாலுக்கா ஹோட்டல், பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக அதன் தலைவர் M. ராம்குமார், செயலாளர் N. அருள் குமரன் பொருளாளர் விக்னேஷ் ஆகியோர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஹோட்டல்களில் இருந்து உணவுப் பொருட்களை வாங்கி ஆன்லைன் வழியாக விற்பனை செய்யும் பெரும் நிறுவனங்கள், விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு மறைமுகக் கட்டணங்களை அந்த ஹோட்டல் உரிமையாளர்களிடம் வசூலித்து வருகின்றனர். இதனால் ஹோட்டல் தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும், உணவு விற்பனைக்கான உரிய தொகையை, உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாமக்கல் நகர மற்றும் தாலுகா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ராம்குமார் மற்றும் பொருளாளர் அருள் குமரன் ஆகியோர், “ஆன்லைனில் zomota மற்றும் Swiggy ஆகிய பெரும் நிறுவனங்கள் ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு மாதிரி கமிஷன் பெறுகின்றார்கள்.
நாமக்கல் தாலுக்காவில் மட்டும் 85 கடைகள் ஆன்லைன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தினமும் 10 லட்சம் மதிப்பில் ஆன்லைனில் உணவுப் பொருள் வியாபாரம் நடைபெறுகிறது.
Zomota மற்றும் Swiggy உடன் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை எனில் ஜூலை 1 முதல் காலவரையற்ற ஆன்லைன் வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாகத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு விதமான கமிஷன் வித்தியாசம் இருப்பதாகவும், மேலும், ஒரு வாரம் கழித்து தான் கடை உரிமையாளருக்குப் பணம் வரும் நிலையில் அந்த வியாபாரம் நிலைப்பாட்டைப் பார்க்கும்போது ஹோட்டல் உரிமையாளர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே இந்த பெரும் நிறுவனங்கள் இதுகுறித்து நாமக்கல் நகர மற்றும் தாலுகா ஹோட்டல் உரிமையாளர்களாகிய எங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இல்லையெனில் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் அந்த நிறுவனங்களுக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்வது இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.
June 23, 2025 7:22 PM IST


