• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? பஞ்சாப் – பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை | ipl playoffs punjab kings to  play with rcb in qualifer 1  today

GenevaTimes by GenevaTimes
May 29, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? பஞ்சாப் – பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை | ipl playoffs punjab kings to  play with rcb in qualifer 1  today
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்​பூரில் உள்ள மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில், நடை​பெறும் பிளே ஆஃப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்​ஸ், ராயல் சாலஞ்​சர்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி லீக் சுற்​றில் 14 ஆட்​டங்​களில் விளை​யாடி 9 வெற்​றி, 4 தோல்​வி, ஒரு முடி​வில்லாத ஆட்​டம் என 19 புள்​ளி​களை குவித்து முதலிடத்​துடன் நிறைவு செய்​திருந்​தது. அந்த அணி 2014-ம் ஆண்​டுக்கு பிறகு தற்​போது​தான் முதன்​முறை​யாக பிளே ஆஃப் சுற்​றில் விளை​யாடு​கிறது.

ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி 14 ஆட்​டங்​களில் விளை​யாடி 9 வெற்​றி, 4 தோல்​வி, ஒரு முடி​வில்​லாத ஆட்​டம் என 19 புள்​ளி​களை பெற்ற போதி​லும் லீக் சுற்றை 2-வது இடத்துடன் நிறைவு செய்​தது. ஏனெனில் பஞ்​சாப் அணி​யின் நிகர ரன் விகிதம் 0.372 ஆகவும், பெங்​களூரு அணி​யின் நிகர ரன் விகிதம் 0.301 ஆகவும் இருந்​தது.

நடப்பு சீசனில் பஞ்​சாப் அணி​யின் கேப்​டன் ஸ்யேரஸ் ஐயர், பயிற்​சி​யாளர் ரிக்கி பாண்​டிங் ஆகியோரது கூட்​டணி அணிக்கு சிறந்த முடிவு​களை கொடுத்​துள்​ளது. 10 ஆண்​டு​களுக்கு பிறகு தற்​போது​தான் அந்த அணி தொடர்ச்​சி​யாக உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்தி வரு​கிறது. தொடக்க பேட்​டிங்​கில் பிரப்​சிம்​ரன், பிரியன்ஷ் ஆர்யா சிறப்​பாக செயல்​பட்டு வரு​கின்​றனர். நடு​வரிசை​யில் ஜோஷ் இங்​லிஷ், ஸ்ரேயஸ் ஐயர் பலம் சேர்த்து வரு​கின்​றனர்.

பின்​வரிசை​யில் நேஹல் வதே​ரா, ஷசாங் சிங் ஆகியோர் தங்​களது அதிரடி​யால் ஆட்​டத்​தின் போக்கை மாற்​றும் திறன் கொண்​ட​வர்​களாக திகழ்​கின்​றனர். பந்​து​வீச்​சில் தென் ஆப்​பிரிக்​கா​வின் மார்கோ யான்​சன், ஐசிசி உலக சாம்​பியன்​ஷிப் இறு​திப் போட்​டிக்கு தயா​ராகு​வதற்​காக தாயகம் திரும்பி உள்​ளார். இதனால் அவர், பிளே ஆஃப் சுற்​றில் விளை​யாட​மாட்​டார். இது பஞ்​சாப் அணிக்கு சற்று பின்​னடைவை கொடுக்​கக்​கூடும். ஏனெனில் மார்கோ யான்சன் பவர்​பிளே மற்​றும் இறு​திக்​கட்ட ஓவர்​களில் எதிரணி​யின் பேட்​ஸ்​மேன்​களுக்கு அழுத்​தம் கொடுத்து வந்​தார்.

எனினும் மார்கோ யான்​சன் இடத்தை அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் நிரப்​பக்​கூடும். கைல் ஜேமிசனுக்கு கடந்த ஆட்​டத்​தில் வாய்ப்பு கொடுக்​கப்​பட்​டாலும் பெரிய அளவில் அவர், தாக்​கத்தை ஏற்​படுத்​த​வில்​லை. விரல் பகு​தி​யில் காயம் அடைந்​த​தால் கடைசி இரு லீக் ஆட்​டங்​களில் விளை​யா​டாத சுழற்​பந்து வீச்​சாள​ரான யுவேந்​திர சாஹல் இன்​றைய ஆட்​டத்​தில் களமிறங்​கக்​கூடும்.

சுழலில் அவருடன் ஹர்​பிரீத் பிராரும் பலம் சேர்க்​கக்​கூடும். வேகப்​பந்து வீச்​சில் சீரான திறனை வெளிப்​படுத்தி வரும் அர்​ஷ்தீப் சிங், பெங்​களூரு அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

பெங்​களூரு அணி தனது கடைசி ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது. இந்த ஆட்​டத்​தில் 228 ரன்​கள் இலக்கை துரத்​திய பெங்​களூரு அணி 8 பந்​துகளை மீதம் வைத்து 18.4 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 230 ரன்​கள் குவித்து வெற்றி பெற்று அனை​வரை​யும் வியக்​க​வைத்​தது.

பொறுப்பு கேப்​ட​னான ஜிதேஷ் சர்மா அசாத்​தி​ய​மான வகை​யில் மட்​டையை சுழற்றி 33 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 85 ரன்​களும் விளாசி மிரட்​டி​னார். அவரது அதிரடி​யின் காரண​மாகவே பெங்​களூரு அணி வெற்றி பெற்று லீக் சுற்றை 2-வது இடத்​துடன் நிறைவு செய்ய முடிந்​தது. அவரிடம் இருந்து

மேலும் ஒரு சிறந்த இன்​னிங்ஸ் வெளிப்​படக்​கூடும். மேலும் தொடக்க பேட்​டிங்​கில் பில் சால்ட், விராட் கோலி ஜோடி பஞ்​சாப் அணி​யின் பந்​து​வீச்சு துறைக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும். வேகப்​பந்து வீச்​சாளர் ஜோஷ் ஹேசில்​வுட், டிம் டேவிட் காயத்​தில் இருந்து குணமடைந்​துள்​ள​தால் இன்​றைய ஆட்​டத்​தில் களமிறங்​கக்​கூடும் என எதிர்​பார்​கப்​படு​கிறது. ஹேசில்​வுட் வருகை பந்​து​வீச்​சுக்கு பலம் சேர்க்​கக்​கூடும்.

இன்​றைய போட்டி நடை​பெறும் மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் நடப்பு சீசனில் பஞ்​சாப் – பெங்​களூரு அணி​கள் கடந்த ஏப்​ரல் 20-ம் தேதி லீக் ஆட்​டத்​தில் மோதி இருந்​தன. இந்த ஆட்​டத்​தில்​ பெங்​களூரு அணி 7 விக்​கெட்​கள்​ வித்​தி​யாசத்​தில்​ வெற்​றி பெற்​றிருந்​தது.

மைதானம் எப்படி? – தகுதி சுற்று 1 ஆட்டம் நடைபெறும் முலான்பூர் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு சீசனில் 4 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் இரு முறை 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டிருந்தது. பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 205 ரன்களை விளாசி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. சிஎஸ்கேவுக்கு எதிராக 219 ரன்களை குவித்த பஞ்சாப் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியிருந்தது.

அதேவேளையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 111 ரன்களில் ஆட்டமிழந்திருந்தது. ஆனால் இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. கடைசியாக இங்கு பஞ்சாப் – பெங்களூரு அணிகள் மோதியிருந்தன. இதில் 158 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

தோற்றால் 2-வது வாய்ப்பு: பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் இன்று பஞ்சாப் – பெங்களூரு மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக ஜூன் 3-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். மாறாக தோல்வி அடையும் அணிக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கும் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப் போட்டியில் கால்பதிக்கும். எலிமினேட்டர் ஆட்டத்தில் நாளை (30-ம் தேதி) குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 1-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தும்.



Read More

Previous Post

“பள்ளிகளில் கட்டாய இந்தி தற்காலிக நிறுத்தம்..” – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

Next Post

Elon musk: “ட்ரம்ப்பின் சட்டம் ஏமாற்றமளிக்கிறது” – முக்கிய மசோதாவில் முரண்படும் மஸ்க்!

Next Post
Elon musk: “ட்ரம்ப்பின் சட்டம் ஏமாற்றமளிக்கிறது” – முக்கிய மசோதாவில் முரண்படும் மஸ்க்!

Elon musk: "ட்ரம்ப்பின் சட்டம் ஏமாற்றமளிக்கிறது" - முக்கிய மசோதாவில் முரண்படும் மஸ்க்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin