என்ன கூறினார் Elon Musk?
பிக் பியூடிஃபுல் பில் குறித்து, “இந்த மசோதாவால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் இது பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிப்பதுடன் DOGE குழுவின் பணிகளை குறைமதிப்பீட்டுக்கு உள்ளாக்குகிறது.” எனக் கூறியுள்ளார் எலான் மஸ்க்.
அதிபர் ட்ரம்ப்புக்கு நெருக்கமான நபராக அறியப்படும் எலான் மஸ்க், இந்த விவகாரத்தில் மாற்றுக்கருத்தை வெளியிட்டிருப்பது அமெரிக்க அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
எலான் மஸ்க் மட்டுமல்லாமல், நாடு திவாலாகும் நிலையை நோக்கிச் செல்கிறது எனக் கூறும் குடியரசுக் கட்சியின் பொருளாதார வல்லுநர்களும் இந்த மசோதா மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இந்த சட்டம் 10 ஆண்டுகளில் நாட்டின் பற்றாக்குறையை 4 ட்ரில்லியன் டாலர்களாக உயர்த்தும் என அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனினும் வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர்கள் கவுன்சில், இந்த தொகுப்பு 5.2 சதவிகிதம் வரை வளர்ச்சியைத் தரும் என கணிக்கின்றனர்.
கடந்த வாரம் பிரதிநிதிகள் சபையால் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் மேல் சபைக்கு (செனட்) செல்லவிருக்கிறது.

