பஞ்சாப் நேஷனல் பேங்க் FD வட்டி விகிதங்கள்:
இந்த சமீபத்திய மாற்றத்தை அடுத்து பஞ்சாப் நேஷனல் பேங்க் தற்போது 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 3.5% முதல் 7.10% வரை மாற்றியுள்ளது. இதில் 390 நாட்களுக்கான டெபாசிட் திட்டத்திற்கு அதிகபட்ச வட்டி விகிதமாக 7.10 சதவீதம் வழங்கப்படுகிறது.
சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்கள்:
பஞ்சாப் நேஷனல் பேங்க் தொடர்ந்து மூத்த குடிமக்களுக்கு அதிக அளவிலான வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது.
சீனியர் சிட்டிசன்களுக்கு (60 முதல் 80 வயது) 5 வருடங்கள் வரையிலான டெபாசிட்களுக்கு கூடுதலாக 50 பேசிஸ் புள்ளிகளையும், 5 வருடங்களுக்கு மேலான டெபாசிட்களுக்கு கூடுதலாக 80 பேசிஸ் புள்ளிகளையும் பெறுவார்கள். அதாவது வட்டி விகிதம் குறித்து பேசும்போது இது 4% முதல் 7.6 சதவீதமாக உள்ளது.
இதுவே சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் (80 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள்) அனைத்து மெச்சூரிட்டிகளிலும் கூடுதலாக 80 பேசிஸ் புள்ளிகளை அதிகமாகப் பெறுவார்கள். அதாவது இவர்களுக்கான வட்டி விகிதம் 4.30 சதவீதம் முதல் 7.90 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.
FDகளுக்கான வெவ்வேறு வட்டி விகிதங்கள்(%):
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை:
பொதுமக்கள் – 3.5
சீனியர் சிட்டிசன் – 4
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 4.3
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை:
பொதுமக்கள் – 3.5
சீனியர் சிட்டிசன் – 4
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 4.3
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை:
பொதுமக்கள் – 3.5
சீனியர் சிட்டிசன் – 4
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 4.3
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை:
பொதுமக்கள் – 4.5
சீனியர் சிட்டிசன் – 5
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 5.3
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை:
பொதுமக்கள் – 4.5
சீனியர் சிட்டிசன் – 5
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 5.3
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை:
பொதுமக்கள் – 5.5
சீனியர் சிட்டிசன் – 6
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 6.3
180 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை:
பொதுமக்கள் – 6
சீனியர் சிட்டிசன் – 6.5
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 6.8
271 நாட்கள் முதல் 302 நாட்கள் வரை:
பொதுமக்கள் – 6.25
சீனியர் சிட்டிசன் – 6.75
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7.05
303 நாட்கள்:
பொதுமக்கள் – 6.15
சீனியர் சிட்டிசன் – 6.65
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 6.95
304 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவாக:
பொதுமக்கள் – 6.25
சீனியர் சிட்டிசன் – 6.75
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7.05
1 வருடம்:
பொதுமக்கள் – 6.7
சீனியர் சிட்டிசன் – 7.2
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7.5
1 வருடத்தை விட குறைவாக – 389 நாட்கள் வரை:
பொதுமக்கள் – 6.8
சீனியர் சிட்டிசன் – 7.3
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7.6
390 நாட்கள்:
பொதுமக்கள் – 7.1
சீனியர் சிட்டிசன் – 7.6
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7.9
391 நாட்கள் முதல் 505 நாட்கள் வரை:
பொதுமக்கள் – 6.8
சீனியர் சிட்டிசன் – 7.3
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7.6
506 நாட்கள்:
பொதுமக்கள் – 6.7
சீனியர் சிட்டிசன் – 7.2
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7.5
507 நாட்கள் முதல் 2 வருடங்கள் வரை:
பொதுமக்கள் – 6.8
சீனியர் சிட்டிசன் – 7.3
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7.6
2 வருடங்களுக்கும் குறைவாக – 3 வருடங்கள் வரை:
பொதுமக்கள் – 6.75
சீனியர் சிட்டிசன் – 7.25
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7.55
3 வருடங்களுக்கும் குறைவாக – 1203 நாட்கள் வரை:
பொதுமக்கள் – 6.25
சீனியர் சிட்டிசன் – 6.75
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7.05
1204 நாட்கள்:
பொதுமக்கள் – 6.15
சீனியர் சிட்டிசன் – 6.65
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 6.95
1205 நாட்கள் முதல் 5 வருடங்கள் வரை:
பொதுமக்கள் – 6.25
சீனியர் சிட்டிசன் – 6.75
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 7.05
5 வருடத்திற்கும் குறைவாக – 1894 நாட்கள் வரை:
பொதுமக்கள் – 6
சீனியர் சிட்டிசன் – 6.8
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 6.8
1895 நாட்கள்:
பொதுமக்கள் – 5.85
சீனியர் சிட்டிசன் – 6.65
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 6.65
1896 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை:
பொதுமக்கள் – 6
சீனியர் சிட்டிசன் – 6.8
சூப்பர் சீனியர் சிட்டிசன் – 6.8
இந்த மாற்றப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் 01.05.2025 முதல் அமலாகும். சீனியர் சிட்டிசன்கள் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களாகவும், சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் 80 வயதிற்கும் மேற்பட்டவர்களாகவும் கருதப்படுகின்றனர்.
அதேபோல பந்தன் வங்கியும் அதனுடைய ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. 3 கோடி ரூபாய்க்கும் குறைவான ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டு, மே 1 2025 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொது சிட்டிசன்களுக்கு 3 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரையில் வழங்கப்படுகிறது. சீனியர் சிட்டிசனுக்கு 3.75% முதல் 8.25 சதவீதம் வரை வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது.
FDகளுக்கான வெவ்வேறு வட்டி விகிதங்கள்(%):
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை:
பொதுமக்கள் – 3
சீனியர் சிட்டிசன் – 3.75
15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை:
பொதுமக்கள் – 3
சீனியர் சிட்டிசன் – 3.75
31 நாட்கள் முதல் 2 மாதங்களுக்கும் குறைவான நாட்கள் வரை:
பொதுமக்கள் – 3.5
சீனியர் சிட்டிசன் – 4.25
2 மாதங்கள் முதல் 3 மாதங்களுக்கும் குறைவான நாட்கள் வரை:
பொதுமக்கள் – 4.5
சீனியர் சிட்டிசன் – 5.25
3 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்கும் குறைவான நாட்கள் வரை:
பொதுமக்கள் – 4.5
சீனியர் சிட்டிசன் – 5.25
6 மாதங்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவாக:
பொதுமக்கள் – 4.5
சீனியர் சிட்டிசன் – 5.25
1 வருடம்:
பொதுமக்கள் – 7.75
சீனியர் சிட்டிசன் – 8.25
1 வருடம் 1 நாள் முதல் 1 வருடம் 9 மாதங்கள் வரை:
பொதுமக்கள் – 7.65
சீனியர் சிட்டிசன் – 8.15
1 வருடம் 9 மாதங்கள் 1 நாள் முதல் 2 வருடங்களுக்கும் குறைவாக:
பொதுமக்கள் – 7.25
சீனியர் சிட்டிசன் – 7.75
2 வருடங்கள் முதல் 3 வருடங்களுக்கும் குறைவாக:
பொதுமக்கள் – 7.25
சீனியர் சிட்டிசன் – 7.75
3 வருடங்கள் முதல் 5 வருடங்களுக்கும் குறைவாக:
பொதுமக்கள் – 7.25
சீனியர் சிட்டிசன் – 7.75
5 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை:
பொதுமக்கள் – 5.85
சீனியர் சிட்டிசன் – 6.60
கடந்த மாதம் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ரெப்போ விகிதத்தை 25 பேசிஸ் புள்ளிகள் குறைத்து, வட்டி விகிதங்களை 6 சதவீதமாக குறைத்துள்ளது. இது இரண்டாவது முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் பந்தன் பேங்க்: மாற்றப்பட்ட FD வட்டி விகிதங்கள்… முழு விவரம் இதோ…!

