Last Updated:
2021 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த ஏபி டிவில்லியர்ஸ் 251 சிக்சர்களுடன் 5 ஆவது இடத்திலும், 2024 இல் ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர் 236 சிக்சர்களுடன் 6 ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்சர்களை அடித்த டாப் 10 வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் வெளியேறியுள்ளன. மற்ற 7 அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடுவதை உறுதி செய்யவில்லை.
டெல்லி, கொல்கத்தா, லக்னோ அணிகளும் அடுத்ததாக தொடரிலிருந்து வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள் குறித்து அறிவதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் வெறும் 141 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கிறிஸ் கெயில் 357 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். 2021 ஆம் ஆண்டுடன் கெய்ல் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார்.
மும்பை அணியின் ரோஹித் சர்மா 262 இன்னிங்ஸ்களில் 297 சிக்சர்களுடன் 2 ஆம் இடத்தில் உள்ளார். இன்னும் 3 சிக்சர்களை அடித்தால் ஐபிஎல் தொடரில் முதல் 300 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் ஏற்படுத்துவார். 290 சிக்சர்களுடன் விராட் கோலி 3 ஆவது இடத்திலும், 262 சிக்சர்களுடன் தோனி 4 ஆவது இடத்திலும் உள்ளனர்.
2021 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த ஏபி டிவில்லியர்ஸ் 251 சிக்சர்களுடன் 5 ஆவது இடத்திலும், 2024 இல் ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர் 236 சிக்சர்களுடன் 6 ஆவது இடத்திலும் உள்ளனர்.
2024 இல் ஓய்வு பெற்ற கிரோன் பொலார்ட் 223 சிக்சர்களுடன் 7 ஆம் இடத்திலும், கொல்கத்தா அணியின் ஆன்ட்ரே ரசல் 220 சிக்சர்களுடன் 8 ஆவது இடத்திலும், ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 216 சிக்சர்களுடன் 9 ஆவது இடத்திலும், 203 சிக்சர்களுடன் கே.எல்.ராகுல் மற்றும் சுரேஷ் ரெய்னா 10 ஆவது இடத்திலும் உள்ளனர்.
May 06, 2025 11:02 PM IST


