Last Updated:
Silambam Competition| தமிழகம் சார்பில் தஞ்சையில் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற மாணவர் கோவர்த்தன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழை வென்றுள்ளார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவர் வாள் வீசும் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி அனிதா. இந்த தம்பதியின் மகன் கோவர்த்தன் (14). இவர் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் படித்து வருகிறார். இந்த மாணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காப்புக் கலைகளைக் கற்று வருகிறார். முக்கியமாக சிலம்பம் சுற்றுதல், வாள் வீசுதல், சுருள்வாள் வீச்சு போன்றவற்றைக் கடினமாகப் பயின்று வருகிறார்.
இந்த மாணவருக்கு கரந்தை பகுதியைச் சேர்ந்த சேயோன் சிலம்பப் பள்ளி பயிற்சியாளர்கள் நிர்மலா, விஸ்வேஸ்வரன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். மாணவர் கோவர்த்தன் ஒற்றைக் கம்பு சுற்றுதல், இரட்டைக் கம்பு சுற்றுதல், வாள் வீசுதல், சுருள்வாள் வீசுதல் போட்டிகள் பலவற்றில் பங்கேற்றுள்ளார். இதில் மாவட்டம், மாநில அளவில் முதலிடம் பிடித்து விருதுகளும், சான்றிதழ்களும் பெற்றுள்ள மாணவர் கோவர்த்தன் தேசிய அளவில் ஹரித்துவாரில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டோருக்கான வாள் வீசும் போட்டியில் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளார்.
இந்தப் பிரிவில் மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரகாண்ட், டெல்லி, சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 30 போட்டியாளர்கள் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் தமிழகம் சார்பில் தஞ்சையில் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற மாணவர் கோவர்த்தன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழை வென்றுள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
April 04, 2025 6:00 PM IST

