மத்திய அரசால் சமீபத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட தரவுகளின்படி, இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ASI) பாதுகாப்பில் உள்ள நினைவுச் சின்னங்களில், ஆக்ராவில் உள்ள பழங்கால நினைவுச் சின்னமான தாஜ்மஹால், 2020 முதல் 2024 வரையிலான (FY19-20 முதல் FY23-24 வரை) காலக்கட்டத்தில் டிக்கெட் விற்பனை மூலம் அதிக வருமானத்தை ஈட்டி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ASI) மேற்கொண்ட டிக்கெட் விற்பனையின் அடிப்படையில் தாஜ்மஹால் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகவும், அதிக லாபம் ஈட்டும் இடமாகவும் உள்ளது. சமீபத்தில் மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள பல்வேறு நினைவுச் சின்னங்களுக்கான நுழைவுச் சீட்டுகளை விற்பனை செய்ததன் மூலம் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) ஆண்டு வாரியாக எவ்வளவு தொகை பெற்றது என்றும், கடந்த 5 ஆண்டுகளில் நுழைவுச் சீட்டுகளை விற்பனை செய்ததன் மூலம் அதிக வருமானம் ஈட்டிய நினைவுச் சின்னங்கள் எவை என்றும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இந்தக் கேள்விகளுக்கான தனது பதிலை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நிதியாண்டு 19-20 முதல் நிதியாண்டு 23-24 வரையிலான நிதியாண்டுகளின் சுழற்சிகளுக்கான தரவை அட்டவணை வடிவத்தில் பகிர்ந்து கொண்டார். அவர் வெளியிட்ட தரவுகளின்படி உலகளவில் மிகவும் பிரபலமாகி உள்ள தாஜ்மஹால் ஐந்து ஆண்டுகளிலும் வருமானத்தில் முதலிடத்தைப் பிடித்தது.
இதையும் படிக்க: ரூ.2.5 லட்சம் கோடி செலவில் 5614 கி.மீ. தூர நெடுஞ்சாலைகள்… தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் புதிய சாதனை…!
அதே நேரம் டிக்கெட் விற்பனை மூலம் அதிக வருமானம் ஈட்டியதில் 2019-20ஆம் நிதியாண்டில், ஆக்ராவில் உள்ள ஆக்ரா கோட்டை மற்றும் டெல்லியில் உள்ள குதுப் மினார் ஆகிய நினைவுச் சின்னங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருந்தன. அதேபோல் 2020-21ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரம் நினைவுச் சின்னங்களும், கோனார்க் சூரிய கோயிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருந்தன. இதனைத் தொடர்ந்து 2023-24ஆம் நிதியாண்டில், டெல்லியின் குதுப் மினார் மற்றும் செங்கோட்டை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருந்தன என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
இதையும் படிக்க: சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்.. மாநிலங்களவையில் மத்திய அரசு முக்கிய தகவல்!
தனது பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களில் கழிப்பறைகள், குடிநீர், நடைபாதைகள், பெஞ்சுகள், சாய்வு தளங்கள், சக்கர நாற்காலிகள், கலாச்சார அறிவிப்பு பலகைகள், அறிவிப்பு பலகைகள், குப்பைத் தொட்டிகள், வாகன நிறுத்துமிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை ASI வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
April 04, 2025 5:00 PM IST
டிக்கெட் விற்பனை வருமானத்தில் நாட்டின் மற்ற சுற்றுலா தலங்களை 5 ஆண்டுகளாக தொடர்ந்து முந்தியுள்ள தாஜ்மஹால்…!

