Last Updated:
இன்று முதல் போட்டி என்பதால் தொடக்க நாள் நிகழ்ச்சிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளன
கொல்கத்தா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மழை குறிப்பிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இருப்பினும், கடந்த சில மணி நேரமாகப் பெரிய அளவில் மழை பெய்யாதது ரசிகர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பம் ஆகிறது.
அதற்கு முன்பாக 7 மணிக்கு டாஸ் போடப்படும். இன்று முதல் போட்டி என்பதால் தொடக்க நாள் நிகழ்ச்சிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளன. இந்நிலையில், கொல்கத்தாவில் வானிலை குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பெய்த மழையின் காரணமாக கொல்கத்தா அணி நேற்று பயிற்சி ஆட்டத்தைத் தவிர்த்தது. கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நல்ல மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட்டை விதித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் தென் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று ஆரஞ்சு அலெர்ட்டும் நாளை மஞ்சள் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில மணி நேரங்களாக மழை பெய்யாமல் சிறிது தூறல் மட்டுமே காணப்படுகிறது.
இதனால் போட்டிக்குப் பெரிய அளவில் இடையூறு ஏற்படாது என்பதால் ரசிகர்கள் போட்டி முழுமையாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
March 22, 2025 6:15 PM IST