• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 | தோனியால் 10 ஓவர்கள் நிலைத்து விளையாட முடியாதா? – பயிற்சியாளர் ஃபிளமிங் வெளிப்படுத்திய உண்மை!

GenevaTimes by GenevaTimes
March 31, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 | தோனியால் 10 ஓவர்கள் நிலைத்து விளையாட முடியாதா? – பயிற்சியாளர் ஃபிளமிங் வெளிப்படுத்திய உண்மை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 31, 2025 12:43 PM IST

தோனியின் முழங்காலில் தேய்மானம் காரணமாக, 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாது என்பதால், அவர் 9வது பேட்ஸ்மேனாக களமிறங்குவதாக சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் விளக்கமளித்துள்ளார்.

எம்.எஸ்.தோனிஎம்.எஸ்.தோனி
எம்.எஸ்.தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 9ஆம் பேட்ஸ்மேனாக களமிறங்குவது ஏன் என்பதை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். 5ஆவது அல்லது 6ஆவது பேட்ஸ்மேனாக வந்து, இறுதி ஓவர்களில் பவுண்டரிகள் விளாசி, பினிஷிங் ரோலை பல ஆண்டுகளாக செய்து வந்தார். ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து பேட்டிங்கில் கீழ் வரிசையில் விளையாடி வருகிறார். இந்த நிலையில், பெங்களூரு அணியுடனான போட்டியின்போது, தோனி 9ஆவது வீரராக களமிறங்கியது குறித்து ரசிகர்கள் மட்டுமின்றி, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும் கேள்விகள் எழுப்பி இருந்தனர்.

13ஆவது ஓவரில் துபே தனது விக்கெட்டை இழந்தபோது, சென்னை அணிக்கு 43 பந்துகளில் 117 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தோனி களமிறங்குவார் என அனைவரும் எதிர்பார்த்தபோது, அஸ்வின் மைதானத்திற்கு வந்தார். போட்டியின் முக்கிய நேரத்தில் பவுண்டரிகள் நிறைய தேவைப்படும்போது, பினிஷிங் ரோல் செய்யும் தோனி களமிறங்காமல், அஸ்வினை களமிறக்கியது ஏன் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஆனால் நேற்றைய ராஜஸ்தான் ஆட்டத்தில் தோனி சீக்கிரமாகவே களமிறங்கினார்.

ஆட்டத்தின் முடிவில் பேசிய சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங், பின்வரிசையில் தோனி களமிறங்குவது குறித்து பேசியுள்ளார். அதில், “தோனியின் உடலும், அவரது முழங்காலும் முன்பு இருந்தது போல் தற்போது இல்லை. கடந்த ஆண்டை காட்டிலும் இப்போது நன்றாக கால் அசைவு இருக்கிறது. எனினும், முழங்காலில் இன்னும் தேய்மானம் இருக்கிறது. எனவே, அவரால் 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாது. விக்கெட் கீப்பராகவும் செயல்படுவதால், அவரால் 10-12 ஓவர்கள் பேட்டிங் செய்வது சாத்தியமில்லை.

Also Read | முன்னாள் பிரதமரின் பேத்தி.. ‘பான் இந்தியா’ நடிகை.. ஆனால் இன்று சினிமா வாய்ப்பு இல்லை.. யார் அவர் தெரியுமா?

எனவே, அந்த நாளை பொறுத்து எந்த இடத்தில் களமிறங்குவது என்பதை முடிவு செய்கிறார். ஆட்டம் சமநிலையில் இருந்தால் சீக்கிரமாகவே களமிறங்குவார். நேற்றும் அப்படித்தான் கொஞ்சம் முன்னதாகவே பேட்டிங் இறங்கினார். தோனி பேட்டிங் செய்ய 13 அல்லது 14வது ஓவருக்குப் பிறகுதான் சரியான நேரம். அதுவும் சூழ்நிலையைப் பொறுத்து அமையும்.

கடந்த ஆண்டு நான் சொன்னது போலவே, சிஎஸ்கேவுக்கு மிகவும் மதிப்புமிக்க வீரர் தோனி. அவர் தற்போதும், தலைமைத்துவம் மற்றும் விக்கெட் கீப்பிங் என சிறந்து விளங்குகிறார். அவரால் 10 ஓவர்கள் நின்று பேட்டிங் ஆட முடியாது. ஆனால், போட்டியின் தன்மை பொறுத்து 13 -14 ஓவர்களில் யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து தோனி விளையாட விரும்புகிறார்” என்று பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு தோனி முழங்காலில் சிகிச்சை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 31, 2025 12:43 PM IST

Read More

Previous Post

ஓய்வை அறிவிக்க ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றாரா மோடி? – சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

Next Post

காற்று கூட நுழையாத அறையில் நெருப்பு… வாழைப்பழத்திற்கு சுவை கூட்டும் பாரம்பரியப் பாணி…

Next Post
காற்று கூட நுழையாத அறையில் நெருப்பு… வாழைப்பழத்திற்கு சுவை கூட்டும் பாரம்பரியப் பாணி…

காற்று கூட நுழையாத அறையில் நெருப்பு... வாழைப்பழத்திற்கு சுவை கூட்டும் பாரம்பரியப் பாணி...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin