Last Updated:
Chemical Free Banana: வாழைத்தார் பழுக்கவைக்க செயற்கை முறை வந்தாலும் அந்த காலத்திலிருந்து இன்னமும் இங்கு வாழைத்தார்கள் ஊத்தம் போட்டே பழுக்க வைக்கப்படுகிறது.
தென்மாவட்டமான தூத்துக்குடியில் வாழை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சரியான விளைச்சல் பார்த்து அறுவடை செய்யப்படும் இந்த வாழைத்தார்களானது இயற்கை சார்ந்த முறையிலேயே இன்றளவும் பழுக்க வைக்கப்படுகிறது.
இன்றைய காலத்தில் பல பகுதிகளிலும் வாழைத்தார்களுக்கு மருந்து அடித்து செயற்கை முறையில் பழுக்க வைக்கும் நிலையிலும், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழைத்தார்கள் ஊத்தம் போடும் முறையில், எந்த ரசாயனமும் இன்றி பழுக்க வைக்கப்படுகிறது.
இந்த ஊத்தம் போடும் முறையே சற்று வித்தியாசமான வழிமுறை தான். காற்றுகூட உள்நுழைய முடியாத இருட்டு அறையில் வாழைத்தார்களை அடுக்கி வைத்து, அந்த அறையில் காணப்படும் சிறு குழியில் காய்ந்த வாழை இலைகளை வைத்து அதனை நெருப்பைக் கொண்டு பற்ற வைத்துவிடுவர்.
இதையும் படிங்க: Pumpkin Halwa: வெண்பூசணியில் இப்படி ஒரு ஸ்வீட்டா… இது கோவையின் ரம்ஜான் ஸ்பெஷல் அல்வா…
இந்த வாழை இலைகள் நன்றாக எரியும் போதே, அதிலிருந்து வெளிவரும் வெள்ளை புகை வெளிவராதவாறு கதவை இறுக்கமாக மூடி விடுவார்கள். ஒருநாள் முழுவதும் அந்த அறையில் இருக்கும் வாழைத்தார்கள் அடுத்த நாள் காலை வெளியில் எடுத்தால் மாலையில் பழுக்கத் தொடங்கிவிடும். இவ்வாறு தான் இங்கு வாழைத்தார்களுக்கு ஊத்தம் நடைபெறுகிறது.
இப்படி ஏராளமான வாழைத்தார்களை ஊத்தம் போடுவதற்காக இங்கு சிறுசிறு அறைகள் வரிசையாகக் காணப்படுகிறது. அந்த சிறிய அறையில் ஒரு மூலையில் சிறு குழி போன்ற வடிவம் காணப்படுகிறது. அந்த குழியில் தான் காய்ந்த வாழை இலைகள் எரிய வைக்கப்படுகிறது. அதில் வரும் வெக்கையிலேயே வாழைப் பழங்கள் பழுக்கும் தன்மையை அடைந்து விடுகிறது.
பல செயற்கை முறை வந்தாலும் அந்த காலத்திலிருந்து இன்னமும் இங்கு வாழைத்தார்கள் ஊத்தம் போட்டே பழுக்க வைக்கப்படுகிறது. இதனால் பழங்களும் நன்கு சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியத்திற்கும் குந்தகம் விளைவிக்காததாக உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
March 31, 2025 1:03 PM IST
Chemical Free Banana: காற்று கூட நுழையாத அறையில் நெருப்பு… வாழைப்பழத்திற்கு சுவை கூட்டும் பாரம்பரியப் பாணி…

