• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : பந்துகளை வீணடித்த மும்பை பேட்ஸ்மேன்கள்.. 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி

GenevaTimes by GenevaTimes
March 29, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : பந்துகளை வீணடித்த மும்பை பேட்ஸ்மேன்கள்.. 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 29, 2025 11:52 PM IST

இதுவரை 2 போட்டியில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து தரவரிசை பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.

News18News18
News18

குஜராத் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை அணியில் தரமான பேட்ஸ்மேன்கள் இருந்த போதிலும், பந்துகளை வீணடித்ததால் அந்த அணி தோல்வியை தழுவியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 9-ஆவது போட்டியாக இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டி, அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 63 ரன்களும், ஜாஸ் பட்லர் 39 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 38 ரன்களும் எடுத்தனர்.

மும்பை அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாட தொடங்கினர். அந்த அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

8 ரன்கள் எடுத்திருந்தபோது ரோகித் சர்மாவும், 6 ரன்களில் ரிக்கெல்டனும் சிராஜ் பந்துவீச்சில் போல்ட் ஆகி ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 36 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஓரளவு அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். மற்றவர்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் இருந்த போதிலும், பந்துகளை அவர்கள் வீணடித்ததால் வெற்றி கைநழுவியது.

இதையும் படிங்க – IPL 2025 | 137 கோடி பார்வையாளர்கள்..! புதிய உச்சத்தை எட்டிய ஜியோஹாட்ஸ்டார்

குஜராத் அணி தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதுவரை 2 போட்டியில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து தரவரிசை பட்டியலில் 9 ஆவது  இடத்தில் உள்ளது.

First Published :

March 29, 2025 11:52 PM IST

Read More

Previous Post

அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன் டெல்லியில் பேசியது என்ன தெரியுமா?

Next Post

முன்மொழியப்பட்ட தகவல் சுதந்திரச் சட்டம் மலேசியாவின் யதார்த்தத்தை பிரதிபலிக்க வேண்டும்: நிபுணர் – Malaysiakini

Next Post
முன்மொழியப்பட்ட தகவல் சுதந்திரச் சட்டம் மலேசியாவின் யதார்த்தத்தை பிரதிபலிக்க வேண்டும்: நிபுணர் – Malaysiakini

முன்மொழியப்பட்ட தகவல் சுதந்திரச் சட்டம் மலேசியாவின் யதார்த்தத்தை பிரதிபலிக்க வேண்டும்: நிபுணர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin