ஈபிஎஸ் – அமித்ஷா சந்திப்பு
கடந்த மார்ச் 24ஆம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், தம்பிதுரை உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். தமிழ்நாட்டில் நடந்த டாஸ்மாக் முறைகேடுகள், இருமொழிக் கொள்கை, நூறுநாள் வேலைத்திட்டம் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு விடுவிக்க வேண்டிய நிதிகளை விடுவிப்பது உள்ளிட்ட மக்கள் பிரச்னைக்காக அமித்ஷாவை சந்தித்தாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து இருந்தார்.

