Last Updated:
இஸ்ரோ திரவ உந்தும வளாகத்தில் 2000 கிலோ நியூட்டன் செமி கிரையோஜெனிக் எஞ்சின் வெப்ப சோதனை வெற்றியடைந்தது. இது எல் வி எம் மூன்று ஏவுதள வாகனத்தின் திறனை 5 டன்களுக்கு மேல் உயர்த்தும்.
மேம்படுத்தப்பட்ட செமி கிரையோஜெனிக் எஞ்சின் சோதனையில் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திர கிரியில் உள்ள இஸ்ரோ திரவ உந்தும வளாகத்தில் நடைபெற்ற பவர் ஹெட் டெஸ்ட் ஆர்டிகள் செமி கிரையோஜனிக் என்ஜின் கட்டமைப்பின் முதல் வெப்ப சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இஸ்ரோ தகவல் அளித்துள்ளது.
2000 கிலோ நியூட்டன் என்ற அளவிலான வெப்ப சோதனையுடன் செமி கிரயோஜனிக் மேம்பாட்டு திட்டத்தில் இஸ்ரோ மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட செமி கிரயோஜெனிக் என்ஜின் சோதனையில் சிறந்த செயல்திறன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட என்ஜின் அமைப்புகள் என அனைத்தும் நம்பிக்கை அளிக்கும் வகையில் வெற்றி அடைந்துள்ளது.
ISRO achieves major breakthrough in Semicryogenic Engine development
ISRO has achieved a major breakthrough in the Semicryogenic development programme with the first successful hot test of the intermediate configuration of the 2000kN Semicryogenic engine, designated as Power…— ISRO (@isro) March 28, 2025
இந்த சோதனை வெற்றியின் மூலமாக இனி வரும் காலங்களில் எல் வி எம் மூன்று ஏவுதள வாகனத்தின் எடை 4 டன் அளவில் இருந்து 5 டன்களுக்கு மேல் கொண்டு செல்லும் வகையில் திறன் அதிகரிக்கும் என இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
March 29, 2025 7:00 PM IST


