• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கடைசி ஓவர் வரை நீடித்த த்ரில்லர் மேட்ச்.. குஜராத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் கிங்ஸ் அணி

GenevaTimes by GenevaTimes
March 25, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
கடைசி ஓவர் வரை நீடித்த த்ரில்லர் மேட்ச்.. குஜராத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் கிங்ஸ் அணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 25, 2025 11:43 PM IST

குஜராத் அணியின் ரூதர்ஃபோர்டுக்கு எதிரான வைட் யார்க்கர்களை வீசி, பஞ்சாப் பவுலர்கள் டாட் பால்களை உருவாக்கினர். கடைசி 3 ஓவர்களில் 57 ரன்களும், கடைசி ஓவரில் 27 ரன்களும் குஜராத் வெற்றிக்கு தேவைப்பட்டது

பஞ்சாப் அணிபஞ்சாப் அணி
பஞ்சாப் அணி

அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ரன்கள் குவித்து 42 பந்துகளில் 9 சிக்சர்களுடன் 97 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். ஷஷாங்க் சிங் 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியில் சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சாய் கிஷோரை தவிர்த்து மற்ற பவுலர்களை பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் வெளுத்தெடுத்தனர். இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் – சாய் சுதர்சன் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

கில் 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜாஸ் பட்லருடன் இணைந்து சாய் சுதர்சன் அதிரடியாக விளையாட ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது.

41 பந்துகளில் சுதர்சன் 6 சிக்சர்களுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 54 ரன்களில் பட்லர் வெளியேற அதையடுத்து குஜராத் அணியின் ரன் குவிப்பு வேகம் குறையத் தொடங்கியது.

15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் பஞ்சாப் அணியின் பவுலர்கள் சிறப்பாக வியூகம் அமைத்து பந்துகளை வீசியதால், குஜராத்தின் ரன் குவிப்பு வேகம் குறைந்தது.

இதையும் படிங்க – Dhoni Exclusive : ருதுராஜ் கேப்டன்ஷிப் முதல் விராட் கோலி வரை.. சுவாரசிய தகவல்களை பகிர்ந்த எம்.எஸ். தோனி

குறிப்பாக குஜராத் அணியின் ரூதர்ஃபோர்டுக்கு எதிரான வைட் யார்க்கர்களை வீசி, பஞ்சாப் பவுலர்கள் டாட் பால்களை உருவாக்கினர். கடைசி 3 ஓவர்களில் 57 ரன்களும், கடைசி ஓவரில் 27 ரன்களும் குஜராத் வெற்றிக்கு தேவைப்பட்டது.

Punjab Kings hold their nerves in the end to clinch a splendid win against Gujarat Titans ❤️


Scorecard ▶ https://t.co/PYWUriwSzY#TATAIPL | #GTvPBKS | @PunjabKingsIPL pic.twitter.com/0wy29ODStQ

— IndianPremierLeague (@IPL) March 25, 2025

20 ஓவரை அர்ஷ்தீப் சிங் துல்லியமாக வீசி 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வென்றது

First Published :

March 25, 2025 11:43 PM IST

Read More

Previous Post

தேசிய அளவில் 8வது இடம்… தமிழ்நாட்டில் வசூலில் டாப்பில் இருக்கும் சுங்கச்சாவடி இதுதான்!- மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தகவல்!

Next Post

சூடான்: மதவழிபாட்டு தலம் மீது துணை ராணுவம் தாக்குதல் – 5 பேர் பலி | Makkal Osai

Next Post
சூடான்: மதவழிபாட்டு தலம் மீது துணை ராணுவம் தாக்குதல் – 5 பேர் பலி | Makkal Osai

சூடான்: மதவழிபாட்டு தலம் மீது துணை ராணுவம் தாக்குதல் - 5 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin