Last Updated:
குஜராத் அணியின் ரூதர்ஃபோர்டுக்கு எதிரான வைட் யார்க்கர்களை வீசி, பஞ்சாப் பவுலர்கள் டாட் பால்களை உருவாக்கினர். கடைசி 3 ஓவர்களில் 57 ரன்களும், கடைசி ஓவரில் 27 ரன்களும் குஜராத் வெற்றிக்கு தேவைப்பட்டது
அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ரன்கள் குவித்து 42 பந்துகளில் 9 சிக்சர்களுடன் 97 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். ஷஷாங்க் சிங் 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியில் சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சாய் கிஷோரை தவிர்த்து மற்ற பவுலர்களை பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் வெளுத்தெடுத்தனர். இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் – சாய் சுதர்சன் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
கில் 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜாஸ் பட்லருடன் இணைந்து சாய் சுதர்சன் அதிரடியாக விளையாட ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது.
41 பந்துகளில் சுதர்சன் 6 சிக்சர்களுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 54 ரன்களில் பட்லர் வெளியேற அதையடுத்து குஜராத் அணியின் ரன் குவிப்பு வேகம் குறையத் தொடங்கியது.
15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் பஞ்சாப் அணியின் பவுலர்கள் சிறப்பாக வியூகம் அமைத்து பந்துகளை வீசியதால், குஜராத்தின் ரன் குவிப்பு வேகம் குறைந்தது.
குறிப்பாக குஜராத் அணியின் ரூதர்ஃபோர்டுக்கு எதிரான வைட் யார்க்கர்களை வீசி, பஞ்சாப் பவுலர்கள் டாட் பால்களை உருவாக்கினர். கடைசி 3 ஓவர்களில் 57 ரன்களும், கடைசி ஓவரில் 27 ரன்களும் குஜராத் வெற்றிக்கு தேவைப்பட்டது.
Punjab Kings hold their nerves in the end to clinch a splendid win against Gujarat Titans ❤️
Scorecard ▶ https://t.co/PYWUriwSzY#TATAIPL | #GTvPBKS | @PunjabKingsIPL pic.twitter.com/0wy29ODStQ— IndianPremierLeague (@IPL) March 25, 2025
20 ஓவரை அர்ஷ்தீப் சிங் துல்லியமாக வீசி 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வென்றது
March 25, 2025 11:43 PM IST


