Last Updated:
தமிழ்நாட்டு சுங்கச்சாவடிகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் 18 ஆயிரம் கோடி ரூபாய் கட்டணம் வசூல் செய்துள்ளது. அதில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் சுங்கச்சாவடி 1,124 கோடி ரூபாயுடன் தேசிய அளவில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் 10 சுங்கச் சாவடிகளில் இருந்து ₹14,000 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்த வசூலில், குஜராத்தின் பார்தனா சுங்கச் சாவடி ₹2,043.81 கோடி வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் தோப்பூர் சுங்கச் சாவடி, ₹1,124 கோடி வசூலுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி, செல்வகணபதி, காங்கிரஸ் உறுப்பினர்கள் விஷ்ணு பிரசாத், ஜோதிமணி உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழ்நாட்டில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் 31 சுங்க சாவடிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் 1,063 சுங்கச்சாவடிகள் இயங்கி வருவதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : நாடு முழுவதும் இன்றும், நாளையும் வங்கிகள் செயல்படுமா? – ஸ்டிரைக் என்ன ஆனது?
மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, 2023-24 நிதி ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் ₹4,221 கோடி வசூலிக்கப்பட்டதாகவும், கடந்த நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் வரை ₹2,871 கோடி வசூலிக்கப்பட்டதாகவும், மேலும் கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் ₹18,546 கோடி வசூலாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
March 24, 2025 10:42 AM IST
Toll Plaza | தேசிய அளவில் 8வது இடம்… தமிழ்நாட்டில் வசூலில் டாப்பில் இருக்கும் சுங்கச்சாவடி இதுதான்!- மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தகவல்!


