Last Updated:
ஆதார் என்பது முக்கியமான அடையாளமாக உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, அரசின் சார்பில் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் பெறுவதற்கு ஆதார் மிகவும் அவசியமாக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஆதார் அட்டையை 10 வருடங்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்வதன் முக்கியத்துவத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆதார் எண் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளம் ஆகும். ஆதார் என்பது முக்கியமான அடையாளமாக உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, அரசின் சார்பில் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் பெறுவதற்கு ஆதார் மிகவும் அவசியமாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆதார் அட்டையை 10 வருடங்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்வதன் முக்கியத்துவத்தை இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாக ஆதார் எண்ணை வங்கி கணக்கு,ரேஷன் கார்டு போன்றவற்றுடன் இணைத்து வைத்திருப்போம் அது மட்டுமல்லாமல் பல்வேறு சான்றதற்காக ஆதாரை பயன்படுத்தி வந்திருப்போம். அந்த வகையில் ஆதாரை பத்து வருடத்திற்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும்.
ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட நபரின் ஆதார் இயங்குகிறதா அதனை அவர் தொடர்ந்து பயன்படுத்துகிறாரா என்பதை குறிப்பிடுவதற்கு ஆதார் புதுப்பித்தல் என்பது அவசியமாக உள்ளது .மேலும் நாம் அனைத்திற்கும் இதனை பயன்படுத்தும் போது அப்டேட் செய்யாமல் வைத்திருந்தால் அதன் மூலம் இணைக்கப்பட்டிருக்கும் ரேஷன் கார்டு வங்கி புத்தகம் போன்றவையும் பயன்படுத்த முடியாமல் போகலாம். அதனால் பத்து வருடத்திற்கு ஒருமுறை ஆதாரை புதுப்பித்தல் அவசியம்.
ஆதார் புதுப்பித்தலுக்கு இ சேவை மையம் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ சேவை மையம் நிரந்தர ஆதார் பதிவு மையம் மூலமாக ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம். பத்து வருடங்களுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துவதற்காக அரசு டிசம்பர் 12 ஆம் தேதி வரை இணையதளத்தில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: வீட்டில் சுபகாரியங்கள் தடைப்படுகிறதா? உங்க பூஜை அறையில் இதை மட்டும் செய்யுங்க!
இதனைப் பயன்படுத்தி படித்தவர்கள், இணையதளம் பயன்படுத்துவோர் வீட்டிலிருந்தே இணைய சேவையை பயன்படுத்தி ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம்.
ஆதார் எண்ணை புதுப்பிக்க தேவையான ஆவணங்கள் வங்கிப் புத்தகம், வாக்காளர் அட்டை, ஃபான் கார்டு, ரேஷன் கார்டு ஆகும்.
இணையவழியாக நீங்களே புதுப்பித்துக் கொண்டால் இலவசமாக ஆதார் அப்டேட் செய்ய முடியும். அல்லது நிரந்தர ஆதார் சேவை மையம் மூலம் புதுப்பித்தல் செய்ய வேண்டும் என்றால் இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50 ஆகும். மேலும் சிலர் ஆதார் புதுப்பித்தவுடன் தங்களுக்கு புதிய ஆதார் அட்டை கிடைக்கும் என்று நினைத்துக் கொள்வர், அது தவறு ஆதாரை புதுப்பித்தவுடன் ஆன்லைன் மூலமாக உங்களது முகவரியோ ,பெயர் மாற்றமோ அப்டேட் செய்யப்படும், ஆனால் நீங்கள் பழைய அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார். புதுக்கோட்டை மாவட்ட ஆதார் நிரந்தர சேவை மையத்தின் தர உள்ளீட்டாளர் ஷர்மிளா.
March 20, 2025 10:24 PM IST


