Last Updated:
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் உடல்நலம் அடைந்த பிறகு வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், உடல்நலம் சீரானதும் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்கள் தங்கி இருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். புவியீர்ப்பு விசை, சூழல் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அவர்களின் உடல்நிலை பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை 45 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் நலமுடன் இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சுனிதா வில்லியம்ஸின் உடல்நிலை, பூமிக்கு ஏற்ற இயல்புக்கு திரும்ப, சில காலம் ஆகும் என குறிப்பிட்டார். எனவே, சுனிதா மற்றும் வில்மோர் உடல்நலம் அடைந்த பிறகு, வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் டிரம்ப் கூறினார்.
March 20, 2025 10:03 PM IST


