Last Updated:
இந்தியாவை பொறுத்த அளவில் தங்கம் என்பது கலாச்சாரம், பொருளாதார அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தங்கத்தின் விலை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை உயர்வு முன் எப்போதும் இல்லாததை விட அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது.
இல்லத்தரசிகள் எப்போது விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள இருப்பினும், உலகளாவிய தங்கத்தின் தேவை, பணவீக்கம் உள்ளிட்டவை காரணமாக தங்கத்தின் விலை தற்போதைக்கு குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. 1965 ஆம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 72 ரூபாயாக காணப்பட்டது. அடுத்தடுத்த 10 ஆண்டுகளில் இதன் விலை கடுமையாக உயர்ந்தது.
இந்தியாவை பொறுத்த அளவில் தங்கம் என்பது கலாச்சாரம், பொருளாதார அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது. பண்டிகைகள், திருமணம், சுப காரியங்கள் உள்ளிட்டவைகளுடன் நல்லதொரு முதலீடாகவும் இந்தியர்கள் தங்கத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும் சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் தங்கத்தின் விலை உயர்வு அவர்களை கவலை கொள்ள செய்துள்ளது. 1964 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பின்வருமாக பார்க்கலாம். 50 – 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தங்கத்தின் விலை பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
1964 ஆம் ஆண்டு முதல் 2025 வரை 10 கிராம் தங்கத்தின் விலை பின்வருமாறு-
| ஆண்டு | 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை |
| 1964 | ரூ.63.25 |
| 1965 | ரூ.71.75 |
| 1966 | ரூ.83.75 |
| 1967 | ரூ.102.50 |
| 1968 | ரூ.162 |
| 1969 | ரூ.176 |
| 1970 | ரூ.184 |
| 1971 | ரூ.193 |
| 1972 | ரூ.202 |
| 1973 | ரூ.278 |
| 1974 | ரூ.506 |
| 1975 | ரூ.540 |
| 1976 | ரூ.432 |
| 1977 | ரூ.486 |
| 1978 | ரூ.685 |
| 1979 | ரூ.937 |
| 1980 | ரூ.1,330 |
| 1981 | ரூ.1670 |
| 1982 | ரூ.1,645 |
| 1983 | ரூ.1,800 |
| 1984 | ரூ.1,970 |
| 1985 | ரூ.2,130 |
| 1986 | ரூ.2,140 |
| 1987 | ரூ.2,570 |
| 1988 | ரூ.3,130 |
| 1989 | ரூ.3,140 |
| 1990 | ரூ.3,200 |
| 1991 | ரூ.3,466 |
| 1992 | ரூ.4,334 |
| 1993 | ரூ.4,140 |
| 1994 | ரூ.4,598 |
| 1995 | ரூ.4,680 |
| 1996 | ரூ.5,160 |
| 1997 | ரூ.4,725 |
| 1998 | ரூ.4,045 |
| 1999 | ரூ.4,234 |
| 2000 | ரூ.4,400 |
| 2001 | ரூ.4,300 |
| 2002 | ரூ.4,990 |
| 2003 | ரூ.5,600 |
| 2004 | ரூ.5,850 |
| 2005 | ரூ.7,000 |
| 2006 | ரூ. 8,490 |
| 2007 | ரூ.10,800 |
| 2008 | ரூ.12,500 |
| 2009 | ரூ.14,500 |
| 2010 | ரூ.18,500 |
| 2011 | ரூ.26,400 |
| 2012 | ரூ.31,050 |
| 2013 | ரூ.29,600 |
| 2014 | ரூ.28,006 |
| 2015 | ரூ.26,343 |
| 2016 | ரூ.28,623 |
| 2017 | ரூ.29,667 |
| 2018 | ரூ.31,438 |
| 2019 | ரூ.35,220 |
| 2020 | ரூ. 50,141 |
| 2021 | ரூ. 52,670 |
| 2022 | ரூ. 52,670 |
| 2023 | ரூ. 65,330 |
| 2024 | ரூ. 65,330 |
| 2025 (இன்று வரை) | ரூ. 89,610 |
March 18, 2025 3:16 PM IST


