அமெரிக்காவின் போர்நிறுத்த முன்மொழிவை ரஷ்யா நிராகரித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான ஆலோசகர் யூரி உஷாகொவ் இதனைத் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான முயற்சியாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோல்ட்ஸ் நேற்றைய தினம் யூரி உஷாகோவுடன் நடத்திய தொலைபேசி கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வொளாடிமிர் ஜெலன்ஸ்கி ஏற்கனவே அமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார். (a)