Last Updated:
ஹோலி பண்டிகையையொட்டி உத்தரபிரதேசத்தில் மசூதிகள் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளன. மத ரீதியான பிரச்சனைகளைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹோலி பண்டிகையையொட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள மசூதிகள் தார்பாய் கொண்டு மூடப்பட்டு வருகின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹோலி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டப்பட்டு வருகிறது. நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஒரு சில இடங்களில் நாளை கொண்டாடப்பட்ட உள்ளது. ஹோலி பண்டிகையின் போது மக்கள் மற்றவர்கள் மீது வண்ணப்பொடியை வீசி மகிழ்வது வழக்கமாகும்.
இதனிடையே ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி, மத ரீதியான பிரச்சனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அலிகார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளை தார்ப்பாய் கொண்டு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹோலி பண்டிகையின் போது ஊர்வலங்கள் நடக்கும் என்பதால், அப்போது எந்த வன்முறையும் நடக்காமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதம் தொடங்கி விட்ட நிலையில் இஸ்லாமியர்கள் நோன்பு எடுத்து தினமும் தொழுது வருகின்றனர்.
இந்நிலையில், ஹோலி பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் மசூதிக்கு சென்று தான் தொழுகையில் ஈடுபட வேண்டும் என்றில்லை, வீட்டில் இருந்தே தொழுகையில் ஈடுபடலாம் என உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். ஒரு வேளை அவர்கள் மசூதிக்கு செல்ல விரும்பினால், தங்கள் மீது வண்ண பொடியை வீசிவிட்டார்கள் என புகார் தெரிவிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
March 14, 2025 8:06 AM IST


