Last Updated:
BCCI 18-வது IPL அட்டவணையை அறிவித்துள்ளது. மார்ச் 22, 2025 முதல் மே 25, 2025 வரை 74 போட்டிகள் நடக்கின்றன. மத்திய சுகாதாரத்துறை, சில விளம்பரங்களை தடை செய்ய BCCI-க்கு கடிதம் எழுதியுள்ளது.
18-வது டாடா இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிக்கான அட்டவணையை அதிகாரப்பூர்வமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இந்த வருடம் IPL மார்ச் 22 அன்று தொடங்கி, மே 25 அன்று முடிவடையும். 13 மைதானங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் 12 டபுள் ஹெட்டர் ஆட்டங்களும் அடங்கும். பிற்பகல் போட்டிகள் இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கும், மாலை நேர போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கும் தொடங்கும்.
மார்ச் 22, 2025 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் IPL திருவிழா தொடங்குகிறது.
முதல் டபுள் ஹெட்டர் போட்டி மார்ச் 23, 2025 அன்று நடைபெறும். அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி ஹைதராபாத்தில் வைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்க்கும் ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையே சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் மாலை நேர போட்டியாக நடைபெறும்.
இதையும் படியுங்கள் : IPL 2025 : ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் இங்கிலாந்து வீரர்.. 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட வாய்ப்பு
லீக் கட்டத்திற்குப் பிறகு, 2025-ம் ஆண்டின் IPL பிளேஆஃப் போட்டிகள் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும். குவாலிஃபையர் 1 (மே 20, 2025) & எலிமினேட்டர் (மே 21, 2025) போட்டி ஹைதராபாத்திலும், குவாலிஃபையர் 2 (மே 23, 2025) கொல்கத்தாவிலும், இறுதிப் போட்டி (மே 25, 2025) கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.
ஐபிஎல் போட்டியின்போது தொலைக்காட்சிகளிலும், மைதானத்திலும் சில பொருள்களை விளம்பரம் செய்ய வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இருப்பதால், புகையிலை, மது ஆகியவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்வதை தடை செய்ய வேண்டும்.
அதேபோல், மது அல்லது புகையிலை ஆகியவற்றின் நேரடி அல்லது மறைமுக தயாரிப்புகளை விளையாட்டு வீரர்களும், வர்ணனையாளர்களும் விளம்பரப்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளது.
March 10, 2025 5:24 PM IST
IPL 2025: ஐ.பி.எல். போட்டிகளில் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு..? இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்