Last Updated:
2002 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வென்றிருந்தது. நியூசிலாந்து அணி 2000 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 12 ஆவது முறையாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா ஏற்படுத்திய மோசமான ரெக்கார்டை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸின்போது நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர் வெற்றி பெற்றார். அந்த வகையில் தொடர்ச்சியாக 12 ஆவது முறையாக ஒருநாள் போட்டிகளில் டாஸ் வெல்லும் வாய்ப்பை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இழந்துள்ளார்.
தொடர்ந்து அவருக்கு டாஸ் வெற்றி பெறுவதில் துரதிர்ஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 2023 நவம்பர் மாதத்திலிருந்து நடைபெற்ற எந்த ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா டாஸ் வெற்றி பெறவில்லை. இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா 1998 அக்டோபர் முதல் 1999 மே வரை இடையிலான காலகட்டத்தில் 12 முறை டாஸில் வெற்றி பெறவில்லை. ஒட்டுமொத்த அளவில் பார்க்கும்போது இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 15 ஆவது முறையாக டாஸில் தோல்வி அடைந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் விமர்சகர்கள், ”டாஸில் வெற்றி பெறுவது என்பது பெரிய விஷயமல்ல. போட்டியின் போது சிறப்பாக விளையாட வேண்டும். அதில்தான் வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்கள்.
ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில், ”இந்தியா டாஸில் தோல்வி அடைவது நல்லதுதான். அதன்மூலம் எதிரணியை பேட்டிங் செய்ய சொல்வதா அல்லது பந்து வீசச் சொல்வதா என்ற சிறிய அளவிலான நெருக்கடியிலிருந்து விடுபட முடியும்” என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அஸ்வின், ”இந்திய அணி சேசிங் செய்வதிலும் டிஃபண்ட் செய்வதிலும் பல முறை வெற்றி பெற்றுள்ளது.
எனவே இந்தியா டாஸில் வெற்றி பெற வேண்டிய அவசியம் கிடையாது” என்று தெரிவித்தார். இன்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் இந்தியா சிறப்பாக பந்துவீசி வருகிறது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
முன்னதாக 2002 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வென்றிருந்தது. நியூசிலாந்து அணி 2000 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.
March 09, 2025 4:26 PM IST