• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்க மக்களுக்கு பதவி விலகும் ஜனாதிபதி பைடன் விடுத்துள்ள எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
January 16, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்க மக்களுக்கு பதவி விலகும் ஜனாதிபதி பைடன் விடுத்துள்ள எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவில்(us) உள்ள ஒரு சில பணக்காரர்களிடையே, ஆபத்தான அதிகாரக் குவிப்பு நிலை உருவாகி வருவதாக ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் ஜோ பைடன்(joe iden) அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிபதவியிலிருந்து இன்னும் ஒரு சில நாள்களில் விலகவிருக்கும் ஜோ பைடன், ஓவல் அலுவலகத்திலிருந்து நாட்டு மக்களுக்கு பிரியாவிடை உரையை நேற்று(15) புதன்கிழமை ஆற்றினார்.

அப்போது, அமெரிக்காவில், ஒரு சில பணக்காரர்களிடையே ஆபத்தான அதிகாரக் குவிப்பு போன்ற நிலை உருவாகி வருவதாகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.


தொடர்ந்து பேசிய அவர்,

அதிகாரம் மற்றும் செல்வாக்குடன் உருவாகி வரும் தன்னலக்குழு

இன்று அமெரிக்காவில் மிகப்பெரிய சொத்துகளுடன், அதிகாரம் மற்றும் செல்வாக்குடன் தன்னலக்குழு ஒன்று உருவாகி வருகிறது. இது நாட்டின் ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தையும் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகளுக்கு எதிரான அச்சுறுத்தலாக நிற்கிறது என்று கூறியுள்ளார்.

அமெரிக்க மக்களுக்கு பதவி விலகும் ஜனாதிபதி பைடன் விடுத்துள்ள எச்சரிக்கை | Us President Biden Farewell Address


தற்போது இவர்கள் மூலம் பரப்பப்படும் தவறான தகவல்களால் அமெரிக்க மக்கள் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். செல்வந்தர்களிடையே குவியும் அதிகாரம், அதிகார துஷ்பிரயோகத்துக்குத்தான் வழிவகுக்கும்.

பொய்களால் உண்மை மறைக்கப்படுகிறது

மறுபக்கம் ஊடக சுதந்திரமும் மறுக்கப்படுகிறது, உண்மையான செய்திகளை வெளியிடுவோர் மெல்ல காணாமல் போய்விடுகிறார்கள். பொய்களால் உண்மை மறைக்கப்படுகிறது என்றார்.

அமெரிக்க மக்களுக்கு பதவி விலகும் ஜனாதிபதி பைடன் விடுத்துள்ள எச்சரிக்கை | Us President Biden Farewell Address

நான் இந்த நாட்டின் மீது என்னுடைய முழு அன்பையும் அர்ப்பணித்திருக்கிறேன். அதற்கு ஈடாக, அமெரிக்க மக்களும் தங்களுடைய முழு அன்பை எனக்கு செலுத்தினார்கள், அவர்களது ஆசியைப் பெற்றுள்ளேன் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப்(donald trump) ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்கவிருக்கிறார். முன்னதாக, அன்றைய தினமே, வெள்ளை மாளிகையிலிருந்து ஜோ பைடன் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

ஸ்பேடெக்ஸ் ஒருங்கிணைப்பில் இஸ்ரோ வெற்றி; விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா

Next Post

இந்திய கடல் பாதுகாப்புத் திறனில் மைல்கல்…! கடற்படையில் மேலும் மூன்று புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு…

Next Post
இந்திய கடல் பாதுகாப்புத் திறனில் மைல்கல்…! கடற்படையில் மேலும் மூன்று புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு…

இந்திய கடல் பாதுகாப்புத் திறனில் மைல்கல்...! கடற்படையில் மேலும் மூன்று புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin