• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஸ்பேடெக்ஸ் ஒருங்கிணைப்பில் இஸ்ரோ வெற்றி; விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 16, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
ஸ்பேடெக்ஸ் ஒருங்கிணைப்பில் இஸ்ரோ வெற்றி; விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் ‘டாக்கிங்’ செயல்முறை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம், செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைந்த 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது.

சர்வதேச விண்வெளி மையத்தைப் போல, வரும் 2035ம் ஆண்டுக்குள் தனி விண்வெளி மையத்தை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. மேலும், ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்ட பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இத்தகைய பணிகளுக்கு, விண்வெளியில் இரு விண்கலன்களை இணையச் செய்யும் டாக்கிங் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இதற்கான முன்னோட்டமாக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட் மூலம் அனுப்பிய இரு செயற்கை கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது.

தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய இந்த ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் முதலில் ஜனவரி 7ம் தேதி இணையச் செய்வதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் ஒருங்கிணைக்கும் திட்டம் தள்ளிப்போனது. தொடர்ந்து, அனைத்து சென்சார்களும் மதிப்பீடு செய்யப்பட்டு, படிப்படியாக, ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை இணைப்பதற்கான தூரம் குறைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று (ஜன.,16) விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் ‘டாக்கிங்’ செயல்முறை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ‘விண்கலன்களை இணையச் செய்யும் வரலாற்று நிகழ்வு வெற்றி பெற்றுள்ளது. விண்வெளியில் டாக்கிங் செய்த 4வது நாடு இந்தியா,’ எனக் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து, செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணையச் செய்த 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

சரித்திர சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ புதிய தலைவர் நாராயணன் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

The post ஸ்பேடெக்ஸ் ஒருங்கிணைப்பில் இஸ்ரோ வெற்றி; விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

இந்திய ஸ்டார்ட்அப்கள் சர்வதேச அளவில் முத்திரை பதித்து வருவதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி | Delighted that our Indian StartUps are making an international imprint, especially in futuristic sectors :PM

Next Post

அமெரிக்க மக்களுக்கு பதவி விலகும் ஜனாதிபதி பைடன் விடுத்துள்ள எச்சரிக்கை

Next Post
அமெரிக்க மக்களுக்கு பதவி விலகும் ஜனாதிபதி பைடன் விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்க மக்களுக்கு பதவி விலகும் ஜனாதிபதி பைடன் விடுத்துள்ள எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin