கந்தையா பாஸ்கரன் அரசியலை நீண்ட நாட்களாக உன்னிப்பாக அவதானித்து கொண்டிருக்கிறார்.இந்த அரசியல் பரப்பிலே நிறைய விமர்சனங்கள் நிறைய அரசியல்வாதிகள் மீது கடுமையான கோபம் உள்ளது..
தொடர்ச்சியாக எங்களது மண்ணும் எங்களுடைய மக்களும் ஏமாற்றப்படுகிறார்கள்.இதனை இப்படியே பாரத்துக்கொண்டு இருப்பது நியாயமா என்ற கேள்வி ஒன்று இருக்கிறது.
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு சீர் செய்யப்பட்ட அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு உள்ளது.இளைய தலைமுறையை வழிகாட்டி அதனை முன்கொண்டு செல்பவர் ஒருவர் வந்தால் அவருடன் சேர்ந்து பயணிப்பதில் எனக்கு விருப்பம் இருந்தது.
தமிழ் தேசிய அரசியல் பரப்பு என்பது இன்று தூக்கு கயிற்றில் மாட்டப்பட்ட நிலையில் உள்ளது.வெளிப்படையாக சொன்னால் தமிழருக்கான அரசியல் இருப்பு இங்கே அழிக்கப்பட்டு விட்டது.
இங்குள்ள அரசியல் கட்சிகள் எப்போது உரிமை அரசியலை விட்டு சலுகை அரசியலுக்கு வந்தார்களோ அன்றே நாங்கள் அடமானம் வைக்கப்பட்டு விட்டோம்.
இவ்வாறு தெரிவித்தார் கந்தையா பாஸ்கரன்.
ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தமிழர் தரப்பு அரசியல் தனது எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விரிவாக தெரிவித்தவற்றை கிழுள்ள காணொளியில் காணலாம்…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

