• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

SBI Data Leak: வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? உடனே பாஸ்வேர்டு, பின் நம்பரை மாற்ற வேண்டுமா? | SBI Data Leak: Should Customers Change Passwords and PINs? Key Safety Steps to Avoid Banking Fraud

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
SBI Data Leak: வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? உடனே பாஸ்வேர்டு, பின் நம்பரை மாற்ற வேண்டுமா? | SBI Data Leak: Should Customers Change Passwords and PINs? Key Safety Steps to Avoid Banking Fraud
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


SBI Data Leak: வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? உடனே பாஸ்வேர்டு, பின் நம்பரை மாற்ற வேண்டுமா?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப் தளத்தில் கசிந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்கள் களவு போயுள்ளதா என அச்சமடைந்துள்ளனர்.

எஸ்பிஐ, டார்க் வெப்பில் சுமார் 3.75 லட்சம் பதிவுகள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு நடத்தியதில், தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய 3,897 வாடிக்கையாளர் பதிவுகளை அடையாளம் கண்டுள்ளது. இதில் பெயர், பாலினம், பதிவு செய்யப்பட்ட கைபேசி எண், பிறந்த தேதி, மின்னஞ்சல் மற்றும் வீட்டு முகவரி, கிளை மற்றும் CIF அடையாள எண், கடன் பதிவுகள் தொடர்பான மெட்டாடேட்டா ஆகியவை அடங்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI Data Leak: வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? உடனே பாஸ்வேர்டு, பின் நம்பரை மாற்ற வேண்டுமா?

இந்த சம்பவத்தால் வங்கி செயல்பாடுகளோ, நிதி செயல்திறனோ எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும், வங்கியின் முக்கிய வணிக செயல்பாடுகள் வழக்கம்போல எந்தவித தடையுமின்றி இயங்கி வருவதாக எஸ்பிஐ கூறியுள்ளது. இருந்தாலும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகின்றனர்.

ஏனெனில் யாருடைய தகவல்கள் கசிந்துள்ளன என்பது தெரியவில்லை ஆனால் சில அடிப்படை தகவல்கள் கசிந்துள்ளன என்பதால் இந்த கசிந்த தகவல்களை கொண்டு மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு நம்பகமானவர்கள் போல் பேச வாய்ப்புள்ளது. உதாரணமாக, வாடிக்கையாளரின் பெயர், எண், முகவரி அல்லது கடன் விவரங்களை அறிந்திருப்பவர் போல பேசி வங்கி ஊழியர் என கூறி ஏமாற்ற முயற்சி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

எனவே போனில் அழைத்து வங்கி அதிகாரி என கூறி வாடிக்கையாளரின் விவரங்களை ஒருவர் கூறுகிறார் என்பதற்காக அவர் உண்மையான வங்கி பிரதிநிதி என்று நம்பிவிடக் கூடாது. உங்களின் ஓடிபி உள்ளிட்ட தகவல்களை எல்லாம் பகிர கூடாது.

இதனால் வாடிக்கையாளர்கள் யாரும் பீதியடைய தேவையில்லை மேலும் கணக்குகளை உடனே மூட வேண்டிய அவசியமில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், வங்கி தொடர்பான எதிர்பாராத அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

போனில் அழைப்பவர் எஸ்பிஐ அல்லது வேறு எந்த நிதி நிறுவனத்திலிருந்தும் பேசுவதாக கூறினாலும் ஓடிபி, ஏடிஎம் பின் என எதையும் யாருக்கும் சொல்லாதீர்கள். எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் அலெர்டுகளை வைத்து, வங்கி கணக்கின் செயல்பாடுகளை சரிபார்க்க வேண்டும், உங்களுக்கு தெரியாத பரிவர்த்தனைகள் இருந்தால் உடனடியாக புகாரளியுங்கள்.

தகவல்கள் கசிந்துள்ளதே தவிர வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்பதால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடையலாம். ஆனால் இனி வரும் நாட்களில் வங்கி சார்ந்த போன் அழைப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். நீண்டகாலமாக ஒரே பாஸ்வேர்டு, பின் நம்பர் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோர் அவற்றை மாற்றி வைப்பது ஒரு பாதுகாப்பு அரணாக இருக்கும்.

Share This Article

English summary

SBI Data Leak: Should Customers Change Passwords and PINs? Key Safety Steps to Avoid Banking Fraud

SBI Data Leak: வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? உடனே பாஸ்வேர்டு, பின் நம்பரை மாற்ற வேண்டுமா?/ SBI has confirmed a suspected cyberattack after customer records surfaced on the dark web. In a preliminary review of about 3.75 lakh records, the bank identified 3,897 customer records containing personal information such as names, mobile numbers.

Story first published: Wednesday, October 21, 2026, 16:43 [IST]

Other articles published on Oct 21, 2026

Read More

Previous Post

News 18 Exclusive : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சிறப்பு பேட்டி.. இன்றிரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Donald Trump | கேள்வி எழுப்பிய செய்தியாளரை கடிந்து கொண்ட டிரம்ப்… என்ன நடந்தது? | World News (உலக செய்திகள்)

Next Post
Donald Trump | கேள்வி எழுப்பிய செய்தியாளரை கடிந்து கொண்ட டிரம்ப்… என்ன நடந்தது? | World News (உலக செய்திகள்)

Donald Trump | கேள்வி எழுப்பிய செய்தியாளரை கடிந்து கொண்ட டிரம்ப்... என்ன நடந்தது? | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin