Last Updated:
ஆசிய பாரா பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள துளசிமதி முருகேசன் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
ஆசிய பாரா பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற துளசிமதி முருகேசன் வெள்ளி அல்லது தங்கப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய பாரா பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் தமிழ்நாட்டை சேர்ந்த துளசிமதி முருகேசன் அடங்கிய மகளிர் அணி சீனாவை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-19, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன் மூலம், துளசிமதி முருகேசன் மற்றும் மனாஸி ஜோஷி இணைக்கு வெள்ளி அல்லது தங்கம் உறுதியானது.
இதே போன்று, பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த சிவராஜன் சோலைமலை இடம்பெற்றிருந்த அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. அவரை பாராட்டியுள்ள முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி ராஜாமணிக்கும் 50 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


