
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து நவலோக்க தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
அவரது சுகாதார நிலையைக் கருத்திற்கொண்டு, மருத்துவ ஆலோசனைகளுக்கு அமைவாகவே அவர் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

