Last Updated:
தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் கிரே மார்க்கெட் ப்ரீமியம் (GMP) 2 வாரங்களில் 84 சதவீதம் உயர்ந்துள்ளது.
தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் கிரே மார்க்கெட் ப்ரீமியம் (GMP) 2 வாரங்களில் 84 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐபிஓ வெளியீட்டுக்கு முன்னதாக நடந்துள்ள இந்த உயர்வு, முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதை உணர்த்தியுள்ளது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் பட்டியலிடப்படாத பங்குகள், அக்டோபர் 3-ம் தேதி ரூ.125 ஆக இருந்த நிலையில், அக்டோபர் 16-ம் தேதியான இன்று ஒரு பங்கு ரூ.230 என்ற நிலையில், வர்த்தகமானது. சமீபத்திய நிலவரப்படி, ஒரு பங்கின் IPO-வின் உயர் விலை வரம்பான ரூ. 1,119-ஐ விட, சுமார் 20.6% பட்டியலிடல் பிரீமியம் இருப்பதற்கான சாத்தியத்தை GMP சுட்டிக்காட்டுகிறது. கிரே மார்க்கெட் பிரீமியங்கள் முதலீட்டாளர்களின் மனநிலையை முழுமையாக பிரதிபலிக்காது. மேலும் அவை பட்டியலிடப்பட்ட விலை அல்லது வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்காது.
நிறுவனப் பிரிவிலும் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், ஜிஐசி பிரைவேட் லிமிடெட் (GIC Pte), அபுதாபி முதலீட்டு ஆணையம் மற்றும் கத்தார் முதலீட்டு ஆணையம் போன்ற உலகளாவிய நிதியங்களும், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், மோதிலால் ஓஸ்வால் ஏஎம்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட உள்நாட்டு நிதி நிறுவனங்களும் ஐபிஓ-வின் ஆங்கர் புக்கில் ஒதுக்கீடுகளைக் கோருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


