• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நாங்க உங்களுக்கு சீனியர்: ஸ்டார்லிங்க் அனுமதி குறித்த எலான் மஸ்கின் கருத்துக்கு ஏர்டெல் நிறுவனர் பதிலடி..!! | “We’ve Waited 5 Years”: Sunil Mittal Hits Back at Elon Musk, Says Airtel Is Ahead of Starlink in India’s Satellite Internet Queue

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
நாங்க உங்களுக்கு சீனியர்: ஸ்டார்லிங்க் அனுமதி குறித்த எலான் மஸ்கின் கருத்துக்கு ஏர்டெல் நிறுவனர் பதிலடி..!! | “We’ve Waited 5 Years”: Sunil Mittal Hits Back at Elon Musk, Says Airtel Is Ahead of Starlink in India’s Satellite Internet Queue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாங்க உங்களுக்கு சீனியர்: ஸ்டார்லிங்க் அனுமதி குறித்த எலான் மஸ்கின் கருத்துக்கு ஏர்டெல் நிறுவனர் பதிலடி..!!

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் தனது சேட்டிலைட் நேரடி இணைய சேவை வழங்க விண்ணப்பம் செய்துள்ள நிலையில் இந்திய பெரு முதலாளிகள் அதற்கான அனுமதி கிடைக்க விடாமல் சதி செய்வதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டினார். ஜியோ நிறுவன தலைவர் அம்பானியை குறிப்பிட்டு நீங்கள் தான் இந்தியாவின் பாஸ் என்பது தெரியாமல் போய்விட்டது என வம்பிழுத்தார்.

எலான் மஸ்கின் கருத்து கடும் எதிர்ப்புகளை கிளப்பியது. மத்திய அரசு, இணைய சேவை உரிமம் வழங்குவதில் எந்த பாகுபாடும் இல்லை என விளக்கம் தந்தது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ப்ளூம்பெர்க் மாநாட்டில், ஏர்டெல் நிறுவனரும் பாரதி என்டர்பிரைசஸ் தலைவருமான சுனில் பாரதி மிட்டல் கலந்துகொண்டு பேசினார்.

நாங்க உங்களுக்கு சீனியர்: ஸ்டார்லிங்க் குறித்த எலான் மஸ்கின் கருத்துக்கு ஏர்டெல் நிறுவனர் பதிலடி..!!

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்கை காட்டிலும் தாங்கள் தான் இந்த அனுமதிக்காக வரிசையில் முதலில் காத்திருப்பதாக கூறினார். நாங்கள் அனைவரும் எங்களது அனுமதிகளுக்காக காத்து கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் நான் அவரை விட (எலான் மஸ்க்) மிகவும் முன்னிலையில் இருக்கிறேன். ஏனெனில் ஏர்டெல் சார்பில் நாங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பித்துவிட்டோம். எங்கள் நிறுவனத்தின் தரைவழி நெட்வொர்க் 3 ஆண்டுகளாக தயாராக உள்ளது. எங்களது செயற்கைக்கோள்கள் கடந்த 5 ஆண்டுகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றன. எங்களுக்கும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என கூறினார்.

எலான் மஸ்க்கிற்கு அனுமதி கிடைப்பதற்கு குறைந்தபட்சம் சில நாட்களுக்கு முன்னதாகவாவது எங்களுக்கு அந்த அனுமதி கிடைத்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம் என சுனில் மிட்டல் கூறினார். அந்தவகையில் சேட்டிலைட் வழி இணையசேவை வழங்கும் போட்டியில் ஏர்டெல் நிறுவனம் முன்னணியில் இருப்பது உறுதியாகியுள்ளது.

இறுதி கட்ட பாதுகாப்பு அனுமதிகள் மட்டுமே தற்போது நிலுவையில் உள்ளன. இந்த அனுமதி கிடைத்தவுடன், பாரம்பரிய மொபைல் நெட்வொர்க்குகள் எட்ட முடியாத இந்தியாவின் மிக தொலைதூர கிராமங்கள் மற்றும் மூலை முடுக்குகளுக்கும் சாட்டிலைட் இன்டர்நெட் சேவை எளிதாக சென்று சேரும் என சுனில் மிட்டல் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் டிஜிட்டல் பொருட்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரிகளை குறைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். குறைந்த வரிகள் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே, டிஜிட்டல் தொழில்நுட்பம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்த ஒரு பெரிய உந்து சக்தியாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார். இனி வரும் நாட்களில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மிக முக்கிய பங்காற்றும் என அவர் கூறினார்.

Share This Article

English summary

“We’ve Waited 5 Years”: Sunil Mittal Hits Back at Elon Musk, Says Airtel Is Ahead of Starlink in India’s Satellite Internet Queue

நாங்க உங்களுக்கு சீனியர்: ஸ்டார்லிங்க் அனுமதி குறித்த எலான் மஸ்கின் கருத்துக்கு ஏர்டெல் நிறுவனர் பதிலடி..!! / Bharti Airtel chairman Sunil Bharti Mittal has responded to Elon Musk’s allegation that Indian business leaders were blocking Starlink’s entry, saying Airtel’s satellite internet venture applied for approvals five years ago and is therefore ahead of Starlink in the regulatory queue.

Story first published: Wednesday, October 14, 2026, 16:48 [IST]

Other articles published on Oct 14, 2026

Read More

Previous Post

உலக மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியா வியூகத்துடன் செயல்படுகிறது.. விமர்சனங்களுக்கு வெளியுறவு அமைச்சர் பதிலடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

உள்ளூர் தொழிலாளர்களைப் பாதுகாக்க சிங்கப்பூர் மாதிரியைப் பின்பற்றுங்கள் – வீ 

Next Post

உள்ளூர் தொழிலாளர்களைப் பாதுகாக்க சிங்கப்பூர் மாதிரியைப் பின்பற்றுங்கள் – வீ 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin