• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

2100-க்குள் உலகம் அழிந்துவிடுமா? 3 முக்கிய ஆபத்துகள்.. அப்போ மனிதகுலத்தை அச்சுறுத்துவது இதுதானா? | World Extinction by 2100? Lancet Study Reveals 3 Key Threats That Could Put Humanity at Risk

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
2100-க்குள் உலகம் அழிந்துவிடுமா? 3 முக்கிய ஆபத்துகள்.. அப்போ மனிதகுலத்தை அச்சுறுத்துவது இதுதானா? | World Extinction by 2100? Lancet Study Reveals 3 Key Threats That Could Put Humanity at Risk
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Hema Vandhana

Time
Published: Monday, October 12, 2026, 10:29 [IST]

பெய்ஜிங்: இன்னும் 74 வருடங்களுக்குப் பிறகு இந்த உலகம் எப்படி இருக்கும்? நம்முடைய பிள்ளைகள், பேரக்குழந்தைகள் எப்படி இருப்பார்கள்? நிம்மதியாக வாழ்வார்களா? இப்படி நிறைய கேள்விகள் இயல்பாகவே எழும் நிலையில், மனிதகுலத்தின் எதிர்காலத்தையே பாதிக்கக்கூடிய 3 முக்கிய ஆபத்துகள் குறித்து ஓர் ஆய்வு எச்சரித்துள்ளது.. குறிப்பாக அணு ஆயுதப் போர், செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு, காலநிலை மாற்றம் என இந்த 3 ஆபத்தான விஷயங்களையும் சுட்டிக்காட்டுகிறது.. இதனை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

மனிதர்களின் உயிருக்கும், எதிர்கால வாழ்க்கைக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய 17 முக்கிய அச்சுறுத்தல்களை ஆய்வாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர். இதில் அணு ஆயுதப் போரும், ஏஐ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடும் மனிதகுலமே அழியும் நிலையை ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன..

World Extinction AI Threat Climate Change

காலநிலை மாற்றம் உள்ளிட்ட மற்ற ஆபத்துகளும் எதிர்காலத்தில் மனிதர்களின் வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.. அப்படி இந்த 3 ஆபத்துகளும் ஏன் கவலை தருகின்றன? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்..

அணு ஆயுதப் போர்

ஒரு போர் நடந்தால், அதில் பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்ட நாடுகள் மட்டும்தான் என்று நினைக்கலாம்.. ஆனால், அணு ஆயுதப் போர் ஏற்பட்டால், அதன் பாதிப்பு உலகின் பல நாடுகளுக்கும் பரவலாம்.. அணுகுண்டுகள் வெடிக்கும்போது உருவாகும் புகை வானத்தில் பரவி, சூரிய ஒளி பூமியை வந்தடைவதைத் தடுக்கலாம். இதனால் பூமியின் வெப்பநிலை குறைந்து, விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படலாம்..

பயிர்கள் சரியாக வளராவிட்டால், அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தி குறையலாம். இதனால் போர் நடக்காத நாடுகளில்கூட உணவுப் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து இருக்கிறது.. அதாவது, உலகின் ஒரு பகுதியில் நடக்கும் அணு ஆயுதப் போர், மற்ற நாடுகளில் வசிக்கும் மக்களுக்கும் சாப்பாட்டுப் பிரச்சினையை ஏற்படுத்தலாம் என்பதுதான் இதில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து..

ஏஐ தொழில்நுட்பம்

இன்றைக்கு நாம் கேள்வி கேட்டால் பதில் சொல்லும் ஏஐ, போட்டோக்களை உருவாக்கும் ஏஐ என பல டெக்னாலஜிகள் வந்துவிட்டன. இவை நம்முடைய வேலைகளை ஈஸியாக்குகின்றன.. ஆனால், இதே டெக்னாலஜியை தவறான நோக்கத்துக்குப் பயன்படுத்தினால் என்ன ஆகும்?

உதாரணமாக, ஆபத்தான நோய்களை பரப்பும் கிருமிகளை பயன்படுத்தி ஆயுதங்களை உருவாக்க சிலர் முயற்சி செய்தால், அதற்கும் ஏஐ தொழில்நுட்பம் உதவலாம்.. அப்படிப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், நோய் பலருக்குப் பரவும் ஆபத்து ஏற்படலாம். அதை தடுத்து நிறுத்துவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

அதுக்காக ஏஐ வந்துவிட்டதாலேயே மனிதகுலம் அழிந்துவிடும் என்று இந்த ஆய்வு சொல்லவில்லை. அதைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்காவிட்டால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படலாம் என்பதைதான் முன்கூட்டியே எச்சரிக்கிறது..

வெயில் கொளுத்துவது காரணமா

கோடை வந்தாலே வெயில் தாங்க முடியவில்லை என்கிறோம்.. சில இடங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்படுகிறது. இன்னும் சில இடங்களில் மழையில்லாமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற மாற்றங்கள் உலகின் பல பகுதிகளில் மக்களின் வாழ்க்கையை பாதிக்கின்றன.

பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தால், கடுமையான வெப்பம், வெள்ளம், காட்டுத்தீ போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கலாம். விவசாயம் பாதிக்கப்பட்டால் உணவுப் பொருட்களின் விலையும் உயரலாம். குடிக்க தண்ணீர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படலாம். இதனால் ஏற்கனவே வறுமையில் இருக்கும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

அதனால் காலநிலை மாற்றம் என்பது வெயில் அதிகமாக இருப்பது மட்டுமல்ல.. நாம் சாப்பிடும் உணவு முதல் குடிக்கும் தண்ணீர் வரை பல விஷயங்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினை..

அப்படியானால் மனிதகுலம்?

தி லான்செட் (The Lancet) இதழில் வெளியான ஆய்வு, எதிர்காலத்தில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய 17 விஷயங்களை லிஸ்ட் போட்டு சொல்லியுள்ளது.. இதில் அணு ஆயுதப் போரும், ஏஐ டெக்னாலஜியும் தவறாக பயன்படுத்துவதும் மனிதகுலத்தையே அழிக்கும் அளவுக்குப் பெரிய ஆபத்துகளாக இருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது.. அதேபோல், பூமியில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் காலநிலை மாற்றமும் மக்களின் உடல்நலம், விவசாயம், அன்றாட வாழ்க்கை எனப் பலவற்றைப் பாதிக்கலாம்..

இதுதவிர, காற்று மாசுபாடு, புகைப்பழக்கம், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடு, தொற்றுநோய்கள், மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத கிருமிகள் போன்றவையும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

2100-ம் ஆண்டுக்குள் உலகம் அழியுமா

ஆனால், 2100-ம் ஆண்டுக்குள் உலகம் அழிந்துவிடும் என்று இந்த ஆய்வு உறுதியாகச் சொல்லவில்லை. இந்த ஆபத்துகள் அதிகரிக்காமல் தடுக்க வேண்டியதன் அவசியத்தையே வலியுறுத்துகிறது. அனைத்து நாடுகளு ஒன்றாக சேர்ந்து செயல்பட்டு, போர் அபாயங்களைக் குறைத்து, ஏஐ தொழில்நுட்பத்தை பாதுகாப்பாக பயன்படுத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் பாதிப்புகளை கண்டிப்பாக குறைக்க முடியும்.

மொத்தத்தில் இது உலகம் அழியும் என்ற கணிப்பு அல்ல.. அப்படி ஒரு நிலை வராமல் தடுக்க மனிதர்கள் இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த லான்சன் ஆய்வு விடுக்கும் எச்சரிக்கையாகும்…!!!

English summary

World Extinction by 2100? Lancet Study Reveals 3 Key Threats That Could Put Humanity at Risk

Read More

Previous Post

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Next Post

Gold Rate: வாரத்தின் முதல் நாளே நல்ல செய்தி..!! போன வாரம் நடந்தது இந்த வாரம் நடக்க கூடாது..!! | Gold Rate Today in Tamil Nadu: 22-Carat Gold Falls by ₹40 per Gram; Check Chennai, Coimbatore and Madurai Prices

Next Post
Gold Rate: வாரத்தின் முதல் நாளே நல்ல செய்தி..!! போன வாரம் நடந்தது இந்த வாரம் நடக்க கூடாது..!! | Gold Rate Today in Tamil Nadu: 22-Carat Gold Falls by ₹40 per Gram; Check Chennai, Coimbatore and Madurai Prices

Gold Rate: வாரத்தின் முதல் நாளே நல்ல செய்தி..!! போன வாரம் நடந்தது இந்த வாரம் நடக்க கூடாது..!! | Gold Rate Today in Tamil Nadu: 22-Carat Gold Falls by ₹40 per Gram; Check Chennai, Coimbatore and Madurai Prices

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin