சவூதி அரேபியாவில் உள்ள தம்மாம் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (12) இயக்கப்படவிருந்த விமான சேவையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இரத்து செய்துள்ளது.
குறித்த விமான நிலையத்திற்குச் செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் UL253 மற்றும் UL254 ஆகியவை செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
அதேநேரம், நாளை (13) விமானங்களின் இயக்கப்படுமா என்பது குறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 309 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறிவரும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தகவல்படி, உயிரிழந்தவர்களில் 4 சவூதி பிரஜைகளும், 2 பங்களாதேஷ் பிரஜைகளும், அமெரிக்கா, ஜோர்டான், பாலஸ்தீனம், சிரியா, சூடான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

