Last Updated:
டெல்லியில் போர் பதற்றச் சூழல் நிலவுவதாகவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது யுத்தம் தொடுக்க துணை ராணுவப் படை குவிக்கப்பட்டிருப்பதாகவும் சிபிஎம் சண்முகம் தெரிவித்துள்ளார்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், டெல்லியில் போர் பதற்றச் சூழல் நிலவுவதாகவும், நம் நாட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது யுத்தத்தைத் தொடுக்க பல்லாயிரக் கணக்கான துணை ராணுவப் படை குவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கடந்த 6ஆம் தேதி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற நிலையில், ஆகாஷ்வானி வளாகத்தின் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு பின் இரவு கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் 7ஆம் தேதி ஜந்தர் மந்தர் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி செல்ல முயன்றபோது அவர்களை தடுத்து காவல்துறை கைது செய்தது. இந்தக் கைதின் போது, எம்.பி.க்கள் தாக்கப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று (8ஆம் தேதி) மகாத்மா காந்தி நினைவு இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காங்கிரஸ் மட்டுமின்றி மாணவர்கள் அமைப்பும் டெல்லியில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், டெல்லியில் போர் பதற்றச் சூழல் நிலவுவதாகவும், நம் நாட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது யுத்தத்தைத் தொடுக்க பல்லாயிரக் கணக்கான துணை ராணுவப் படை குவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிபிஎம் சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில், “நான் இப்போது புதுதில்லியில் இருக்கிறேன். டெல்லியில் போர் பதற்றச் சூழல் நிலவுகிறது. நம்நாட்டு மாணவர்கள் – இளைஞர்கள் மீது யுத்தத்தை தொடுக்க பல்லாயிரக்கணக்கான துணை ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ளது.
நான் இப்போது புதுதில்லியில் இருக்கிறேன். டெல்லியில் போர் பதற்றச் சூழல் நிலவுகிறது. நம்நாட்டு மாணவர்கள் – இளைஞர்கள் மீது யுத்தத்தை தொடுக்க பல்லாயிரக்கணக்கான துணை ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ளது.
வாக்குத் திருடன் ஞானேஷ்குமாருக்கு எதிரான போராட்டத்தை முறியடிக்க அவரால் பயனடைந்த மோடி – அமித்ஷா உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல் தீவிரமாக களமிறங்கியுள்ளது.நாளை களத்தில் சந்திக்க இருக்கிறோம்.
போராடுவது அடிப்படை உரிமை என்று உரக்கச் சொல்வோம்.— Shanmugam P (@Shanmugamcpim) October 9, 2026
வாக்குத் திருடன் ஞானேஷ்குமாருக்கு எதிரான போராட்டத்தை முறியடிக்க அவரால் பயனடைந்த மோடி – அமித்ஷா உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல் தீவிரமாக களமிறங்கியுள்ளது. நாளை களத்தில் சந்திக்க இருக்கிறோம். போராடுவது அடிப்படை உரிமை என்று உரக்கச் சொல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.


